பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

வல்லிக்கண்ணன்



25. மானுடம்



'கலை இலக்கிய உலகில் பூத்தது' என்று கூறிக்கொண்டு திருச்சி யில் 1979- ல் தோன்றியது 'மானுடம்'. கனமான விஷயங்களைத் தருவதில் அக்கறை கொண்ட இந்த இரு மாதம் ஒரு முறை சிற்றேடு தனது இரண்டாவது இதழில் கலைப்படைப்பு என்பதை பசியைப் போல் ஒரு தேடலை வெளிப்படுத்துவதாக உணர்ந்து திரைப்படங்களை உருவாக்கிய இங்மர் பெர்க்மன் எழுதிய ஒவ்வொரு படமும் எனது இறுதிப் படம் என்ற கட்டுரையின் தமிழாக்கத்தை முழுமையாக வெளியிட்டது.

3-வது இதழில் எஸ். ஆல்பர்ட் எழுதிய 'புதுக் கவிதையின் பாடு பொருள்' என்ற ஆய்வுக் கட்டுரை இலக்கிய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆற்றல் பெற்ற எஸ். ஆல்பர்ட் பின்னர் கவிதைகள், மொழி பெயர்ப்பு முதலியன எழுதியுள்ளார்.

'படித்தல் என்பது உண்மையைத் தேடுவது. அந்தத் தேடல் சுலபமற்றதும் முடிவுறாததும் ஆகும் ( ஜார்ஜ் கிஸ்ஸிங்) என்ற சிந்தனையை ‘மானுடம் பிரகடனம் செய்தது.

‘மானுடத்தில் தரமான படைப்புக்கள்-சமூக விழிப்புணர்வு, சமுதாய மாற்றத்திற்கான உந்துதல்கள்-இவற்றில் நம்பிக்கை கொண்டு செயல் படுபவர்களிடமிருந்து வந்தாலும்...அத்தகைய நோக்கங்களை மறைமுகமாகக் கொண்டு, கலை இலக்கியம் மூலமாய் வாழ்வின் தீவிரத்தை உணர்த்துவோரிடமிருந்து வந்தாலும்.அவைகளின் இலக்கியத் தரம் கருதி வெளியிடத் தயாராயிருக்கிறோம். மானுடம்- படைப்பிலக்கியம், இலக்கிய விமர்சனம், நவீன திரைப்படம், ஓவியம் பற்றிய கட்டுரைகளையும், அரசியல் விமர்சனக் கட்டுரைகளையும் வரவேற்கிறது. படைப்பாளிகளின் மீதான விமர்சனங்களை வெளியிடுவதற்கில்லை என்று ஒரு இதழில் (இரண்டாவது ஆண்டின் முதல் இதழில் ) அறிவித்திருக்கிறது.

‘புதிய பரிமாணங்களில் தெரு நாடகங்கள்; அவற்றின் மீதான சில எதிர்பார்ப்புகள்'; 'ஓவியத்தில் கருக்க நிகழ்முறை'; 'சார்த்தின் தத்துவத்தில் மனிதனின் குணாதிசயம்' (அம்ஷன் குமார் ), 'மேடை நாடக வளர்ச்சி' (எஸ். ஆல்பர்ட்)-கதைகள், கவிதைகள். மொழி