பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

153


பெயர்ப்புக் கவிதைகள் தவிர, 'மானுடம்' இதழ்களில் வந்த கட்டுரைகள் இவை.

‘சிறு பத்திரிகைகள் ஒரு இயக்கமாக, எந்தத் தொடர்ந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தாவிட்டாலும், இன்று புது சினிமா, புது நாடகம் போன்று புது இலக்கியம் படைக்க விரும்புபவர்கள் சிறு பத்திரிகைத்தளத்தில் இயங்குவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. நம்மைச் சுற்றியுள்ள ஆரோக்கியமற்ற சமூக கலை இலக்கியச் சூழலைப் பற்றிய விமர்சனங்களைச் சிறு பத்திரிகைகளில்தான் நாம் தொடர்ந்து செய்ய முடியும். எனவே, சிறு பத்திரிகை ஒரு இயக்கமாக உருவெடுப்பதற்கு முயற்சி செய்வதுதான் இப்போது நாம் செய்யக் கூடியது. இன்றுள்ள சூழ்நிலையில் படைப்பிலக்கியம் படைப்பதுடன் ஒரு பிரக்ஞையுள்ள படைப்பாளியின் வேலை முடிவடைந்து விடுவதில்லை. ஒரு படைப்பிலக்கியம் சரியாகப் புரிந்துகொள்ளப்படக்கூட இங்குள்ள போலி மதிப்பீடுகள் தடையாக இருக்கின்றன. இந்நிலையில் ஒரு கட்டத்தில் இந்த சமூக கலாச்சாரப் போலிகளைத் தகர்க்கவும்- அதற்கும் மேலாக சரியான மதிப்பீடுகளை முன்வைக்க வேண்டியதும் ஒரு சிறு பத்திரிகையின் கடமை யாகிறது. படைப்பிலக்கியத்துடன் சமூகவியல், கலாசாரம்-மற்றும் சார்புடைய துறைகள் பற்றிய விமர்சனக் கட்டுரைகளை மானுடம் தொடர்ந்து வெளியிட இருக்கிறது'.

இது மானுடம் 8-வது இதழின் ஆசிரியர் அறிவித்த குறிப்பு. இதன் ஆசிரியர் ஜி. விஜயகுமார் (ஜீவி) கதை, கட்டுரை, கவிதைகள் எழுதியுள்ளார்.

1981 முதல் (8-வது இதழ்) நவீன இலக்கியக் குரல் என்று அறிவித்து வந்துள்ள மானுடம் இதுவரை பத்து இதழ்கள்தான் வந்திருக்கிறது.

10-வது இதழ் ( ஜனவரி 1983) ஒரு விசேஷ வெளியீடு ஆகும். திருச்சியில் 1982 அக்டோபரில் 'இலக்கு கலாசார இயக்கத்தின் திருச்சிக் குழு' இருநாள் கருத்தரங்கு நடத்தியது. சினிமாவும் நமது கலாசாரமும் எனும் தலைப்பில் பலர் கட்டுரைகள் வாசித்தார்கள். அக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த இதழ்.

ஆரோக்கியமான சினிமா வளர- அசோகமித்திரன்; சினிமாவும் சமுதாயப் பொறுப்பும்-அம்பை, நமது சினிமாவும் நமது கலாசாரமும்-அம்ஷன்குமார் 16 வயதினிலேயும் அதற்குப் பிறகும்- பிரபஞ்சன்பிரபஞ்சன்;