பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

வல்லிக்கண்ணன்


மிருணாள் சென், அநீதி எதிர்ப்பு-கோ. ராஜாராம், பிராந்திய சினிமா, ஒரு மூன்றாவது சினிமாவை நோக்கி-தமிழவன்.

இவை இவ்விதழில் உள்ளன. சுவாரஸ்யமான கட்டுரைகள். சினிமா பற்றி பல்வேறு நோக்குகளில் எழுதப்பட்ட சிந்தனைகள்.

மானுடம் சில இதழ்களில் லினோகட் ஓவியத்தை அட்டையில் பிரசுரம் செய்தது.

'ஏனோ தமிழ்ச் சிற்றேடுகளில் சினிமா பற்றிய பார்வை ஏதும் சரியான முறையில் வருவதில்லை. நவீன ஓவியம் பற்றிய கட்டுரைகளும் சிறு பத்திரிகை வாசகனை மனத்தில் கொள்ளாது சரியான அறிமுகங்களின்றி வெளியிடப்பட்டுள்ளது. இதன் விளைவு நவீன ஓவியத்தை நிறைய சிறு பத்திரிகை வாசகர்கள் புதிய கலை உருவமாக ஏற்றுக் கொள்ளத் தயங்குவதாகும். மானுடன் நவீன ஓவியத்தை நமது வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய ஓரிரு கட்டுரைகள் மூலம் எளிய முறையில் முயன்றிருக்கிறது. சினிமா பற்றியும் அவ்வாறே செய்ய விரும்பி ‘இலக்கு' கருத்தரங்க கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம். தொடர்ந்து வெளியிட இருக்கிறோம்' என்று ஆசிரியர் ஜீவி அறிவித்திருக்கிறார்.

'மானுடம்' தொடர்ந்து வெளிவரும் என்று அவர் குறிப்பிட்டிருந்த போதிலும், அப்புறம் அது வெளிவரவில்லை.