பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

வல்லிக்கண்ணன்


மாறியாக வேண்டும்-மாற்றப்பட வேண்டும்- என்ற கருத்தை வலியுறுத்திய இச்சிற்றேடு சிந்தனைக்கு உரிய ஒரு எண்ணத்தை ஆணித்தரமாக எடுத்துச் சொன்னது-

'நமக்கென்று ஒரு அடிப்படையான சிந்தனை உருவாகும்போது தான் நாம் மாறுவோம். இந்த அடிப்படை சிந்தனைகளோடு நாம் இந்த வாரப் பத்திரிகைகளையும் சினிமாவையும் அண்டத் தெரிந்துகொண்டு, அதன் சுயரூபம் என்னவென்று புரிந்துகொண்டு, அதையெல்லாம் எதிர்த்துப் போராடத் தொடங்கும் போதுதான் இந்த வாரப் பத்திரிகைகள் மாறும், சினிமா மாறும்.'

பட்டறையில் உழைத்து சராசரி இருநூறு ரூபாய் சம்பளம் வாங்கும் தொழிலாளர் சில பேர் சேர்ந்து, மாதம் தலா இவ்வளவு ரூபாய் என்று பணம் போட்டு, பலவிதமான சிரமங்களையும் பொருட்படுத்தாமல் கடுமையான உழைப்பை பத்திரிகையின் வளர்ச்சிக்காகவும் ஈடுபடுத்தி வந்த ஆர்வமும் செயலும் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியன.

தற்போதைய காலகட்டத்தில் நம் பக்கத்து- சமூகப் பொறுப்பு வாய்ந்த- எழுத்தாளர்களின் வேலை எழுதுவதுடன் இருந்துவிட்டால் போதாது. நம்முடைய எழுத்து இடம் பெற ஒரு பத்திரிகை வேண்டும். பத்திரிகை ஆரம்பிப்பது சுலபமல்ல, கணிசமான பண வசதி இதற்குத் தேவைப்படுகிறது. இந்தப் பணத் தேவையையும் அடைந்து பத்திரிகை வெளிவருகிறது என்றால், பத்திரிகையின் குறிக்கோளுக்குரிய மக்களின் இடையில் பத்திரிகை செல்லவும், தொடர்ந்து வெளிவருவதற்கான பொருளாதார வசதியும் இலக்கியப் படைப்புக்களும் தேவைப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அதே சமயத்தில் நாம் எதிர்க்க வேண்டியவர்க ளின் பிரமாண்டமான வசதிகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் உதயம் சம்பந்தப்பட்டவர்கள் அறிவுறுத்திக் கொண்டார்கள்.

இவ்வாறெல்லாம் சிந்தித்துத் திட்டமிட்டு நிதானமாகச் செயல்படக் கூடியவர்கள் கூட்டுறவு உணர்வுடன் நடத்திய போதிலும் உதயம் பேரா தரவு பெற்று நீடித்து வாழ வழியேற்படவில்லை இந்த நாட்டில்.

சகாப்தம்

இது ஒரு 'இலவச இலக்கிய வெளியீடு'. இலக்கியப் பத்திரிகையான ‘கணையாழி' யின் வடிவத்தில் 24 பக்கங்களோடு வெளிவந்தது. முதல் இதழ் 1977 செப்டம்பரில் பிரசுரமாயிற்று. அச்சிட்டு வெளியிடுபவர்