பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

வல்லிக்கண்ணன்


விடியல் தனது பயணத்தில் நிகழ்ந்த இத்தகைய வழுக்கல்களை உணர்ந்து கொள்கிறது. அவை இனி நேராது பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வினைக் கைக்கொள்கிறது.‘

இதை அடுத்து எழுதப்பட்ட அறிவிப்பு விசேஷ முக்கியத்துவம் வாய்ந்தது :

‘விடியல் கடந்த ஆறே மாதங்களில் அனைத்து அணிகளின் ஊடேயும் ஏற்படுத்தியுள்ள சலசலப்பு கொஞ்சநஞ்சமல்ல. திரிபுவாதிகளும் புரட்டல்வாதிகளும் விடியலின் உதயக் கதிர்களைக் கண்டு கதிகலங்கி போனார்கள். அவர்கள் விடியலைத் தொலைத்தே தீர்வது என்று விசேஷ அக்கறையுடன் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்தார்கள்—விடியல் தான் ஏற்றுக் கொண்ட தத்துவத்தின் பலம் கொண்டு இவற்றையெல்லாம் பொடிபடச் செய்து புறந்தள்ளியது.

இருபத்தைந்து இதழ்களைக் கொண்டு வந்திட்ட பெருமிதம் நம் தலைகளை நிமிர்த்தும் இந்த வேளையில் அதற்குக் காரணமான தோழர்கள் தன் நன்றியைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

ஊக்குவித்தும், உதவி செய்தும், போற்றியும், புகழ்பாடியும் விடியலைப் பேணிய அனைத்துத் தோழமை நெஞ்சங்களும், குறிப்பாக, கடல் கடந்த ஈழநாட்டின் தோழர்களும் இங்கு நினைவுகூரப்படுகிறார்கள்.

ஈழநாட்டின் தோழர்கள் இயக்கத்தைப் பற்றி தத்துவார்த்த ரீதியில் கடிதங்களில் விசாரித்திருந்தார்கள். இயக்கத்தோடு, அதாவது எந்த இயக்கத்தோடும் தொடர்பு வைத்திராத விடியல் அவற்றிற்குப் பதிலளிக்க முடியவில்லை. ஆனால் அரசின் கண்களுக்கு நாம் முக்கியப் புள்ளிகளாகிவிட்டோம் என்று தெரிந்தது. விடியலின் ஒவ்வொரு எழுத்தும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு கண்காணிக்கப்பட்டதுவிளைவு? கடிதங்கள் உடைக்கப்பட்டன-படுகின்றன. நமது தோழர்களுக் கிடையில் பணம் அனுப்பி உதவும் அவசியம் உணரப்படாததாயிருக்கிறது. அப்படித் தப்பித் தவறி சந்தாவென, நன்கொடையென வந்த மணியார்டர்கள் 'No such address' என்று காரணங் காட்டி (!) திருப்பி அனுப்பிவைகப்பட்டன.

இப்படிப்பட்ட நிலைகளுடன் மாரடித்துக்கொண்டு, அச்சகக் கூலி, காகிதம், பிளாக்குகள் என செலவழித்துக்கொண்டு, தொடர்ந்து பத்திரிகையைக் கொண்டுவர சாத்தியமில்லாமல் இருக்கிறது. எனவே