பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

213


இருபத்தைந்தாவது நிறைவு இதழான இந்த இதழுடன் விடியல் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இதழைத் தொடர்ந்து கொண்டு வருவது நீங்கள் தீர்மானிக்கிற விஷயம்.

அப்படியானால் இதழைத் தொடர்ந்துகொண்டு வரும் உத்தேசம் அல்லது அக்கறை உங்கள் தரப்பில் எப்படி என்று நீங்கள் கேட்பீர்களானால் தனது நியூரைன்லாந்து கெஸ்ட் பத்திரிகையை நிறுத்த நேர்ந்த பொழுது மாமேதை மார்க்ஸ் குறிப்பிட்டதை மீண்டும் சொல்வது மிகப் பொருந்தும் :

‘எங்களது கருத்தை யாரும் அழிக்க முடியாது. நாங்கள் மீண்டும் ஒரு போர்க் குதிரையின் மீது ஏறி வருவோம். விடைபெற்றுக் கொள்கிறோம். ஆனால் கடைசி முறையாக அல்ல.‘

25 வது இதழின் கடைசிப் பக்கத்தில் கடைசி விஷயமாக ஒரு சீனக் கவிதை அச்சிடப்பட்டது. அதன் தலைப்பு: ‘நன்றி! போய் வருகிறோம்.’

கடைசி வரியும் இதுவேதான்–

சிறு பத்திரிகை வரலாற்றில் விடியலின் வரலாறு வித்தியாசமானது— தனி ரகமானது. இது மேலே சொல்லியுள்ள விவரங்களிலிருந்து புலனாகும்.

‘விடியல்‘ 21-ஏ, குட்டி மேஸ்திரி தெரு, சென்னை-1 என்ற விலாசத்திலிருந்து வெளிவந்தது, அதன் ஆசிரியர் : கே. எம். வேணுகோபாலன்.