பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38. இடதுசாரிப் பத்திரிகைகள்


மார்க்ஸிய நோக்குடன், சமூக யதார்த்த (சோஷலிஸ்ட் ரியலிசம்) எழுத்து முயற்சிகளை வளர்ப்பதற்கென்று பலப்பல சிறு பத்திரிகைகள் தோன்றி மறைந்திருக்கின்றன.

அவற்றில் பெரும்பாலானவை உருப்படியாக எதையும் செய்து காட்டியதில்லை. ‘தாமரை‘, ‘செம்மலர்‘, வழியிலே நடக்க முயன்ற இப்பத்திரிகைகள் சுயமான சிந்தனைத் திறனோ செயலாற்றலோ கொண்டிருக்கவில்லை. ‘சமூக யதார்த்த‘ப் பாணிக் கதைகளையும் புதுக் கவிதைகளையும், அரைத்த மாவையே அரைத்தது போன்ற‘ ரசமான விஷயங்களையும் பிரசுரித்து அவை பக்கங்களை நிரப்பின.

ஆகவே, அந்த விதமான பத்திரிகைகள் பலவும் ‘ஆசை பற்றி‘ ஆரம்பிக்கப்பட்ட ஆர்வ முயற்சிகள் என்றே கணக்கிடப்படல் வேண்டும்.

இந்த ரகச் சிறு பத்திரிகைகள் சென்னையில் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தோன்றின. சில முயற்சிகள் ஒரு வருடம்—ஒன்றரை வருடம் என்ற கால அளவுக்கு உயிருடன் இருந்திருக்கின்றன.

இவற்றில் வெளியான கதைகள் 'சோஷலிஸ்ட் ரியலிச' மரபுப்படி அமைந்திருந்தனவே தவிர ஆழம், கனம், புதுமை, சமூகப் பிரச்னை களைக் கூர்ந்து கவனித்து எழுத்தில் பிரதிபலித்தல் முதலிய தன்மை கள் கொண்ட படைப்புகளாக உருவானதில்லை.

எனவே, இந்தப் பத்திரிகைகள் புதிய தரமான படைப்புகளை அறிமுகப்படுத்தவோ, திறமையுள்ள புதிய எழுத்தாளர்களைக் கண்டு ஆதரித்து, அவர்களது வளர்ச்சிக்குத் தளம் அமைத்துக் கொடுக்கவோ உதவியதில்லை என்றே சொல்லவேண்டும்.

‘தாமரை‘, ‘செம்மலர்‘ ஆகிய தரமான முற்போக்கு இலக்கியப் பத்திரிகைகளில் எழுதிவந்த எழுத்தாளர்களின் படைப்புகள் இப்புதிய சிறு பத்திரிகைகளில் வரவுமில்லை. புதிய இளம் எழுத்தாளர்களின் எழுத்து முயற்சிகளை வரவேற்பதாகச் சொல்லிக் கொண்டே பத்திரிகைகள்