பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43. தீவிரவாதப் பத்திரிகைகள்


ருக்கு நல்லது சொல்வேன்—உண்மை தெரிந்தது சொல்வேன்’ என்ற நோக்குடன், சமூகம், அரசியல், கலை. இலக்கியம் முதலிய சகல துறைகளிலும் கவனம் செலுத்தி, நிஜ நடப்புகளையும், தீவிரமான கருத்துக்களையும், சூடான சிந்தனைகளையும், காரசாரமான விமர்சனங்களையும் எடுத்துச் சொல்வதற்கென்றே சில சிறு பத்திரிகைகள் வந்து கொண்டிருக்கின்றன.

இவை எந்த அரசியல் கட்சி சார்பையும் கொண்டிருக்கவில்லை. அனைத்துக் கட்சிகளின் போக்குகளையும் விமர்சிக்கின்றன. வணிகப் பத்திரிகைகள், பெயர் பெற்ற கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலையுலகப் பிரமுகர்களின் உண்மைத் தன்மைகளை அம்பலப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றன. சமூகத்தில் காணப்படுகிற சிறுமைகளையும் சீரழிவுகளையும் பிற்போக்குத்தனங்களையும் சாடுகின்றன. முற்போக்கான கதைகள், கவிதைகள், கட்டுரைகளையும் பிரசுரிக்கின்றன. அவ்வப்போது பிரபலஸ்தர்களைப் பேட்டி கண்டு, தங்கள் நோக்கில் கேள்விகள் கேட்டு, அவர் களது அபிப்பிராயங்களை வெளிப்படுத்துகின்றன.

‘மன ஓசை‘ என்ற மாத இதழ் இவ்வகையைச் சேர்ந்தது. இது இதர பத்திரிகைகளில் வருகிறவற்றைவிட வித்தியாசமான கதைகளையும், உணர்ச்சிகரமான—எழுச்சியூட்டக்கூடிய— கவிதைகளையும் கட்டுரைகளையும் பிரசுரித்துள்ளது. கவிஞர்கள், கலைஞர்கள் பற்றிய சூடான விமர்சனங்களை வெளியிட்டிருக்கிறது. இதன் சினிமா விமர்சனங்களும் விறு விறுப்பாகவும் கடுமையாகவும் அமைந்து காணப்படுவது வழக்கம்.

இந்தப் பத்திரிகையின் கேள்வி—பதில் பகுதியும் வேகம் நிறைந்ததுதான். ஒரு உதாரணம்

கே : வாரத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பது நல்லது தானே?

ப. இதைப் பணக்காரர்களுக்குச் சொல்லும். அவர்களுடைய உடம்புக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது. ஏற்கெனவே உண்ணாமல்தான்