பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

269


விருந்து என்னும் இலக்கியத் திங்கள் இதழ் திருமதி பகலாவதி பி. ஏ. யை ஆசிரியராகக் கொண்டு, 1975-76-ல் புதுச்சேரியில் பிரசுரமாயிற்று. இது மரபுக் கவிதை, புதுக் கவிதை இரண்டையும் வெளியிட்டு வந்தது. தேவமைந்தன் ( அ. பசுபதி, பழமலய், சக்திப்புயல் முதலியவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

ராகம்- திருச்சியில் தோன்றியுள்ள புதிய இலக்கியப் பத்திரிகை. ஆர். ரமேஷ்குமார், எம். செந்தில்குமார், ஐ. பிரான்சிஸ் மனோகர், எம். டி. முத்துக்குமார் ஆகியோரை ஆசிரியர் குழுவாகக் கொண்டு இயங்குகிற இம் மாத இதழ் 1984 ஆகஸ்ட் முதல் வருகிறது. ’தீபம்’ அளவில் பெரியதாய், 48 பக்கங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ராகம் புதிய சோதனைகளில் துணிச்சலோடு ஈடுபடுகிறது.

ஒரு வருட காலம் கையெழுத்துப் பிரதியில் வந்த ராகம் இன்று அச்சில் உயிர்பெற்றிருக்கிறது. இன்று தெருவிற்கு ஒரு பத்திரிகை வந்துகொண்டிருக்கும் நேரத்தில் ராகம் வெளிவரும் அவசியம் என்ன ?

பெரும்பாலான பத்திரிகைகள் பிஸினஸ் பண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில் ராகம் உண்மையான எழுத்துக்களைத் தரிசிக்க ஆசைப்பட்டு அச்சு உரு எடுத்திருக்கிறது.

எழுத்து சுதந்திரமானது. நிபந்தனைகள் வைத்து, கடிவாளம் மாட்டி எழுதச் சொன்னால் நிஜ எழுத்தைச் சந்திக்க முடியாது. கல்லூரி மாணவர்களின் சிந்தனையில் தமிழ்ப்பட பாதிப்பும், பிரபல எழுத்தாளர்களின் பாதிப்பும் நிறையவே இருக்கின்றன என்ற அபிப்பிராயத்தைப் பொய்யாக்க இதோ ஒரு ராகம் இருக்கிறது என்று காட்டுவோம். மாணவர்களாலும் ஆக்கபூர்வமாய் செய்ய முடியும் என்று நிரூபிப்போம்.

ராகம் ஆரம்ப கால எழுத்தாளர்களுக்கு அரவணைப்பாய், குருகுலமாய் இருக்க ஆசைப்படுகிறது. வித்தியாசமான எழுத்துக்களை, புதுமை முயற்சிகளை இருகரம் கூப்பி வரவேற்கிறது...’

இந்தக் கொள்கை அறிவிப்புடன் தோன்றிய ராகம் இலக்கிய இதழை நடத்துகிறவர்கள் கல்லூரி மாணவர்கள்; தமிழுக்குப் புதியவர்கள்; ஆங்கிலம் மூலம் உலக இலக்கியப் பரிச்சயம் பெற்றவர்கள். அந்த அனுபவத்தை, அறிவை, ஆற்றலைத் துணை கொண்டு, தமிழில்