பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

307


அவற்றிலே ஒன்று ’கவிக்குயில்’ என்ற மாத வெளியீடு.

கவிஞர் டாக்டர் ஆனைவாரி ஆனந்தன் முதலில் ’மகரந்தம்’ என்ற கையெழுத்துப் பத்திரிகை தொடங்கினார். ’சூல். 1. தாது-1’ என்று கணக்கிட்டு எழுதிய அவர் 1983 செப்டம்பரில் அதை ’தட்டச்சு உருட்டுப்படி’ (டைப்ட் சைக்ளோஸ்டைல் ) ஏடு ஆக மாற்றினார். அடுத்து அதன் பெயரை ’சுகந்தம்’ என்றாக்கி டைப் பத்திரிகையாக வெளியிட்டார். 1983 நவம்பரில் ‘ககந்தம்’ அச்சுப் பத்திரிகையாக வளர்ச்சி பெற்றது. ஆசிரியர் : சி. பன்னீர்செல்வம். சிறப்பாசிரியர் : கவிஞர் ஆணைவாரி ஆனந்தன்.

ஆரம்பம் முதலே இவர்களுடைய பத்திரிகையின் குறிக்கோள்

‘ஊழலிலா ஓர் புதிய
சமுதாயம் வேண்டும்,
உழைப்புக்கும் உண்மைக்கும்
மதிப்பிருக்க வேண்டும்;
நீதிமுறை நேர்மைக்கு
வாழ்வளிக்க வேண்டும்,
நிம்மதியே பெருஞ்செல்வம்
நிலைநாட்ட வேண்டும் !‘

‘சமுதாயத்திற்குப் பயன்படும், பாடம் புகட்டும், பண்பாடு காக்கும், தன்மானப் படைப்புகளை‘ சுகந்தம் விரும்பி வரவேற்றது. ‘சுகம்-1 மணம்-1‘ என்ற ரீதியில் எண்ணிக்கை வளர்த்த அது செய்திகள், சிந்தனைகள், துணுக்குகள், மாணவர் படைப்புகள், வாசகர் கடிதங்கள், கேள்வி- பதில் முதலியவற்றை வெளியிட்டது. ‘ஊர்ச்சூழல்‘ என்ற தலைப்பில் கிராமியப் பிரச்னைகளை அலசியது. அட்டைப்படமும் உண்டு.

இப் பத்திரிகை வெளியீட்டாளர்கள் மீண்டும் பெயர் மாற்றம் செய்தார்கள். 1984 டிசம்பர் முதல் இவர்களுடைய பத்திரிகை ‘கவிக்குயில்‘ என்ற பெயரைப் பெற்று, குயில்-1, கீதம்-1 என்று கணக் கிட்டு வளர்ந்து வருகிறது.

நடந்தவை, நடப்பவை என்று செய்திகள் இடம் பெறுகின்றன. ‘சமுதாய வீதியிலே ஊர்ப் பிரச்னைகள் கவனிக்கப்படுகின்றன. மகளிர் இயல் என்று பெண்கள் பகுதி, ‘நல்ல பெண்மணி‘ அறிமுகம், ‘நல்லவர்