பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

309


பகுதிகளிலும் சிறுசிறு பத்திரிகைகளை உழைக்கும் தோழர்கள் உற்சாகத்துடன் ஆரம்பிக்கிறார்கள். இப்படிப்பட்ட முயற்சிகள் சில பொருளாதார பலம் இன்மையால் வெகுவிரைவிலேயே பாதிக்கப்படுகின்றன. நல்ல விஷயங்கள் கிடைக்காத காரணத்தால் சில பிரசுரத்தை நிறுத்திக் கொள்கின்றன. வேறு சிலவற்றில் இவ்விரு தடங்கல்கள் இல்லை என்றாலும்கூட, பத்திரிகை நடத்த முற்படுகிற தொழிலாளித் தோழர்கள், பணத்துக்காக உழைக்க வேண்டியிருக்கிற வேலைகளையும் பத்திரிகை பணியையும் தொடர்ந்து செய்வதில் மிகுந்த சிரமங்கள் இருப்பதை உணர்ந்து, பத்திரிகையை நிறுத்திவிடத் தீர்மானித்திருக்கிறார்கள்.

இவ்விதம் முடிவு கட்ட வேண்டிய அவசியத்துக்கு உள்ளானவர் களில் ‘வழிகள்‘ என்ற பத்திரிகை நடத்திய தோழர்களும் சேர்கிறார்கள்.

கோவை மாவட்டம், பல்லடம் அருகில் உள்ள வடுகபாளையம் என்ற ஊரிலிருந்து வந்தது ‘வழிகள்‘ முற்போக்குச் சிற்றிதழ். நவயுகனும் அவர் நண்பர்களும் சேர்ந்து நடத்திய இச்சிற்றேடு ஒன்பது இதழ்களோடு தனது சுற்றுலாவை முடித்துக்கொண்டது.

‘வாழ்க்கை என்பது சிறைச்சாலை. இதில் நமக்கு இன்பமளிக்கப் பாடிவரும் பறவைகள் புத்தகங்கள் என்ற கருத்துடன் அவர்கள் இப்பத்திரிகையை நடத்தி வந்தார்கள். ‘வழிகள்‘ தனது பயணத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவிப்பு விடுத்துள்ள ஒன்பதாவது இதழில் காணப்படும் வரிகள் இவை :

‘சிறு பத்திரிகை நடத்தினால் நிறையப் பணம் இழக்கவேண்டும் என்பது நாங்கள் அறியாததல்ல. இழப்பதற்குத் தயாராக இருந்ததினாலேயே வழிகள் தொடர்ந்து வெளி வர முடிந்தது; வழிகள் நிறுத்தப்படுவதற்குக் காரணம் பொருளாதாரப் பிரச்னை இல்லை.

எங்களுக்கு இருக்கும் மிகக் குறைந்த ஓய்வு நேரத்தில் இரு மாதங்களுக்கு ஒரு முறை கூட இதழைச் சிறப்பாக வெளியிட முடியவில்லை. மனநிறைவு இலலாமல் கம்மா வெறுமனே இதழை வெளியிட்டுக் கொண்டிருக்க விருப்பமில்லை.

இத் தோழர்களின் சிந்தனைத் தெளிவும் தீர்க்கமான முடிவும் பாராட்டப்பட வேண்டியவை. ‘இதழைச் சிறப்பாக வெளியிட