பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322

வல்லிக்கண்ணன்


குப் பின் தமிழ் நாவல்கள் , கு. ராஜவேலு ஒப்பியல் ரீதியில் எழுதிய சிலப்பதிகாரக் கட்டுரைகள் போன்றவை தொடர்ந்து வெளிவந்திருக்கின்றன.

சுதந்திரத்துக்குப் பின் இலக்கிய வளர்ச்சி என்று ஒவ்வொரு மொழி வாரியாகவும் கட்டுரைகள் வந்திருப்பது பிற மொழி இலக்கிய வளர்ச்சி குறித்து அறிந்து கொள்வதற்கு வகை செய்த முயற்சி ஆகும்.

‘திரைக்கு ஒரு திரை’ என்ற தலைப்பில் ஜெயகாந்தன் திரை உலக உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டும் தொடர் ஒன்றை எழுதியிருக்கிறார்.

’நினைவில் நிற்கும் முன்னுரைகள்’ என்று குறிப்பிடத்தகுந்த நூல் முன்னுரைகளைத் தொடர்ந்து பிரசுரித்ததும், ‘காலத்தை வென்ற சிறுகதைகள்’ என்று அருமையான கதைகளைத் தேடிக் கண்டு வெளியிட்டதும் நல்ல இலக்கிய விருந்து ஆகும் .

அவ்வப்போது, இலக்கியப் பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் அம்சங்களைப் புதிது புதிதாக வெளியிடுவதில் தீபம் உற்சாகம் காட்டத் தவறவில்லை .

கா. நா. சு. எழுதி வந்த ‘மறைவாக நமக்குள்ளே’ மற்றும் வம்பு மேடை, மனம் வெளுக்க, இலக்கிய மேடை (கேள்வி-பதில்) போன்றவை இரசிக்கத்தக்கவை.

‘ஊஞ்சல்— ஒரு புதிய இலக்கியப் பாலம் என்ற பகுதி ரசம் நிறைந்தது. சில முக்கிய எழுத்தாளர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொண்ட கடிதங்கள் இதில் வெளியிடப்பட்டன.

எழுத்தாளர்களும் வாசகர்களும் கலந்து கொண்டு கருத்துப் பரிமாறிக் கொள்வதற்கு வசதியாகச் சில பகுதிகள் இடம் பெற்றுள்ளன. பட்டிமன்றம் அப்படிப்பட்ட ஒரு பகுதி ஆகும்.

தமிழ்ச் சிறுகதை, தமிழ் நாடகம், தமிழ்க் கவிதை, நாட்டின் மொழிப் பிரச்னை, தமிழ் நாவல் முதலிய பொருள்கள் பற்றி காரசாரமான விவாதங்கள் பட்டிமன்றத்தில் நிகழ்த்தப்பட்டன.

இலக்கிய வட்டக் கருத்தரங்கு என்று, வெவ்வேறு ஊர்களில் நடைபெற்ற கருத்தரங்குகள் பற்றிய விரிவான தகவல்கள் தரப்பட்டுள்ளன.

’ஆறங்கம்’ என்ற தலைப்பில் பல்வேறு பொருள்கள் குறித்தும் ஆறு பேர்களிடம் யோசனைகள் சேகரம் செய்து பிரசுரித்திருக்கிறார்கள்.

“என் வாழ்வில் எதிர்பாராத சம்பவம்” என்று அநேகர் தங்களுக்குப் பிடித்த முறையில் சுவையாக எழுதினார்கள்.

சர்வதேச இலக்கியம் பற்றி, ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் படைப்பாளிகள் குறித்து அசோகமித்திரன் எழுதி வந்த தொடர் பயனுள்ளதாகும்.

’பொதுப்பணியில் இவர்கள்’ என்று தொழில் அதிபர்கள் பற்றியும் பிரமுகர்கள் குறித்தும் பேட்டிகளும் கட்டுரைகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

நா. பா. ஆழ்ந்த கருத்துக்களும், அழுத்தமான அபிப்பிராயங்களும் தெரிவித்துத் தலையங்கங்கள் எழுதினார். ‘எனது குறிப்பேடு’ என்ற