பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

329


ரசனைமிக்க வாசகர்களை விடாது பிடித்து வைத்திருககக் கூடிய விதத்தில் சிறு பத்திரிகையின் ஒவ்வொரு இதழும் தரத்தோடும் புதுமைச் சுவையோடும் விளங்க வேண்டும்.

அப்போது இலக்கியப் பிரியர்கள் சந்தா கட்டுவதில் ஆர்வம் உடையவர்கள் ஆவார்கள். அந்தப் பத்திரிகையை விற்க முனைகிற இலக்கிய நண்பர்களுக்கும், ஒவ்வொரு இதழையும் தெரிந்தவர்களிடம் தள்ளிவிடவோ தலையில் கட்டவோ, சிரமப்பட் வேண்டிய தேவை ஏற்படாது.

பரவலாகச் சிறு பத்திரிகைகளைக் கவனிக்கிறபோது, 1970 களிலும் 80களிலும் சிறு பத்திரிகைகள் எண்ணிக்கையில் அதிகமாகத் தோன்றி மறைந்திருக்கின்றன என்பது புலப்படும்.

இப்படி அவை அதிகமாக வந்திருந்த போதிலும், உருப்படியான சாதனைகள் வெகு குறைவுதான் என்பதும் புலனாகும். அநேக முயற்சிகள் பேப்பர் வியாபாரிக்கும் பிரஸ்காரருக்கும் பிசினஸ் தேடிக்கொடுத்த புண்ணியத்தைத் தவிர, எழுத்துக்கோ கலைக்கோ சமுதாயத்துக்கோ எந்தவிதமான பயனையும் அளிக்கவில்லை.

அநேக வெளியீடுகள், வண்ணிக நோக்குப் பொழுது போக்குப் பத்திரிகைகளைப் போல ஒரு தடவை பார்த்துவிட்டு அப்படியே ஒதுக்கி விடக்கூடிய தன்மையில்தான் இருக்கின்றன. பத்திரமாக பாதுகாத்து வைத்து, அடிக்கடி படித்து இன்புறக்கூடிய விதத்தில் நல்ல தரமான, உயர்ந்த படைப்புகளை பெரும்பாலான பத்திரிகைகள் தரவில்லை.

சிறு பத்திரிகைகள் சக்தி நிறைந்த வலிய சாதனங்கள் ஆகும், ஆக முடியும்.

புதிய எழுத்துக்கு, புதிய புதிய பரிசோதனைகளுக்கு அவை இடம் தரும்—தர வேண்டும். புதிது புதிதாகத் திறமைசாலிகளைக் கண்டு கொள்ள அவை உதவக்கூடும். திறமையாளர்களின் வளர்ச்சிக்குத் துணைபுரியக் கூடிய பயிற்சித் தளமாக அவை விளங்க முடியும். கனமான சிந்தனைகள், வளமான கருத்துக்கள், அறிவு வளர்ச்சிக்கு உதவக்கூடிய விவாதங்கள் முதலியவற்றை வளர்த்து, கலை இலக்கியங்களை வளம் செய்ய முடியும்.

இப்படி எல்லாம் இன்று எத்தனை சிறு பத்திரிகைகள் இருக்கின்றன?

வணிக நோக்கில் பெரிய அளவில் பத்திரிகை நடத்துகிறவர்கள் வாசகர்களின் மன அரிப்பைத் தணிக்கும் விதத்தில் எதெதையோ அச்சிட்டு நல்ல தாளைப் பாழாக்குகிறார்கள் என்றால், தங்கள் மன அரிப்பைத் தனித்துக் கொள்வதற்காக சிறு பத்திரிகைகள் நடத்துகிறவர்களில் பெரும்பாலானவர்கள் பணத்தை வீணாக்கி, தரமற்ற, நயமற்ற, கவையற்ற, சாரமற்ற எழுத்துக்களை அச்சிட்டு நல்ல காகிதத்தைப் பாழ் பண்ணுகிறார்கள் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

தரமான படைப்புகளையே தருவோம் என்று அறிவித்த ஒரு சில பத்திரிகை அன்பர்கள்கூட சில இதழ்களுக்குப் பிறகு சாரமற்ற எழுத்துக்-