பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

344

வல்லிக்கண்ணன்


காலாண்டிதழை நடத்தும் பொறுப்பை ஆர். கே. ராஜகோபாலனிடம் ஒப்படைத்துவிட்டார். 1985 ஜூலை முதல், ‘கொல்லிப் பாவை‘, அதன் பதின்மூன்றாவது இதழிலிருந்து, 1988ஜூன் வரை— இருபதாவது இதழ் முடிய, நல்ல இலக்கியப் பணிபுரிந்தது. சுந்தர ராமசாமியின் ஒத்துழைப்பு ‘கொல்லிப் பாவைக்கு‘ அதிகம் கிடைத்துவந்ததை அதன் ஒவ்வொர் இதழும் எடுத்துக்காட்டியது. சுந்தர ராமசாமியின் கதை கட்டுரைகள், பசுவய்யாவின் கவிதைகள், மேல்நாடுகளின் கவிதைகள் மொழிபெயர்ப்பு எனப் பலவகைகளில் அது வெளிப்பட்டது.

பிறகு, 1988-ல் சுந்தர ராமசாமி ‘காலச்சுவடு‘ என்ற சொந்தப் பத்திரிகையைத் தொடங்கினார்.

‘ஞானரதம்‘, தேவ. சித்ரபாரதி என்ற பெயர் கொண்டிருந்த அப்பாஸ் இப்ராகிமால், பல வருடங்கள் நடத்தப்பெற்றது. 1986—ல் அவர், ஞானரதம் ஆசிரியர் பொறுப்பை, க. நா. சுப்ரமண்யத்திடம் ஒப்படைத்தார். க. நா. சு. கவனிப்பால் அது ஒரு நல்ல இலக்கிய ஏடாக ஒரு வருடம் வளர்ந்தது. பொருளாதார நெருக்கடி காரணமாக, இப்ராகிம், ‘ஞானரத‘த்தைத் தொடர்ந்து நடத்த விரும்பவில்லை. ஆகவே, 1987 ஜனவரி இதழ், ‘ஞானாதம்‘ மாசிகையின் கடைசி இதழாக அமைந்தது.

அந்த இறுதி இதழில் க. நா. சுப்பரமண்யம் எழுதிய தலையங்கம் நினைவு கூரத்தகுந்தது. தமிழில் எழுத்துத் தரம் உயர என்பது தலைப்பு அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்:

“பொதுவாகத் தமிழில் படிப்பது என்பதும், சிந்திப்பது என்பதும் ஆண்டுக்காண்டு குறைகிற மாதிரித் தெரிகிறது.

இலக்கியம், பொதுவாகக் கலைகள் என்பன பற்றி எந்தச் சமுதாயத்தில் சிந்தனைகள் பெருகி வளரவில்லையோ அந்தச் சமுதாயத்தில் மற்ற வளங்களும் பெருகுவதில்லை என்பது சரித்திர அனுபவம்.

சரித்திர ரீதியில், மூன்று நாலு தலைமுறைகளாகவே ஒரு கலாச்சார நசிவுக்குத் தமிழ்ச் சமுதாயம் உட்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மற்ற இந்தியச் சமுதாயங்களில் ஏற்படாத இந்தக் கலாச்சார நசிவு இயக்கம், தமிழர்களிடையே இந்த நூறு ஆண்டுகளில் தன் வேலையைப் பூர்த்தி செய்துவிட்டது.

இப்போது, அதன் விளைவுகளை நாம் அனுபவிக்கத் தொடங்கி யிருக்கிறோம். -

கலை என்றால் சினிமா, படிப்பு என்றால் குப்பை கூளங்களைப் படிப்பது, மனித உறவுகள் என்பதைக் கேலிக்கிடமானவையாக நினைப்-