பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

43


பத்திரிகையின் வளர்ச்சியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று கண்டனங்களை வாரி வீசி மகிழ்ந்தார்கள்.

எப்படியோ, கிராம ஊழியன் பலரது கவனத்துக்கும் பரபரப்பான பேச்சுக்கும் உரிய பத்திரிகையாக நடந்து வந்தது. பத்திரிகை விற்பனையில் லாபம் இல்லை; அச்சு இயந்திரங்களைப் பெருத்த லாபத்தோடு விற்க முடியும் என்ற நிலை வந்ததும், அதிபர் அ. வெ. ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் மிஷின்களை விற்று விட்டார். பத்திரிகை நிறுத்தப்பட்டது.

‘கிராம ஊழியன்' 16-5-1947 இதழ் அதன் கடைசி இதழாக அமைந்தது.

☐☐