பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

வல்லிக்கண்ணன்


தமிழ் எழுத்தாளர்களை வளர விடுவதில்லை; தமிழ்க் கலைகளையும் இலக்கியத்தையும் அந்த இனத்தின் எழுத்தாளர்கள் சிதைத்துச் சீர் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களோடு போட்டியிட்டு தமிழ் எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கும் திராவிடக் கலைகளின் வளத்துக்கும், தமிழ் (இலக்கியத்தின் ) மொழியின் ஆரோக்கியமான எழுச்சிக்கும் பணிபுரிய வேண்டும் என்பது திராவிட இயக்கத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. அந்த அடிப்படையில், அக்காலகட்டத்தில் (1940 களில்) ஏகப்பட்ட திராவிட இயக்கப் பத்திரிகைகள் தோன்றின. அவற்றில் ‘பொன்னி' யும் ஒன்று.

‘பாரதிதாசன் பரம்பரை’ என்று கவிஞர்கள் அணி ஒன்று வளர் வதற்கு ‘பொன்னி' துணை புரிந்தது. திராவிட இயக்கக் கொள்கைகளையும் கருத்துக்களையும் பிரதிபலிக்கும் சிறுகதைகள் மிகுதியாக வெளிவந்தன. ஒன்றிரு நாவல்களும் தொடர்கதையாக வந்து கவனிப்புப் பெற்றன.