பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

வல்லிக்கண்ணன்


பரந்தாமன் எடுத்துச் சொல்லும் எண்ணங்களில் மிக முக்கியமான ஒன்று பின் வருவது-

'முழுக்க முழுக்க ஒரு பத்திரிகையே படைப்பாக வெளிவந்தாக வேண்டும் என்கிற அத்தியாவசியத்துக்கான காலகட்டமிது. நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றிலுமே நாம் அதி தீவிர அதிருப்தி கொண்டிருப்பதான நிஜத்துக்கு, இப்படிப்பட்ட ஒரு முழு மாற்றத்துக்கான அணுகலே பரிகாரமாகும். சிறு பத்திரிகைகளின் உள்ளும் புறமுமான படைப்புத் தரங்களின் விஸ்தாரமான வீச்சில்தான் ஜனரஞ்சக ஏடுகளை மிஞ்ச முடியும். மிஞ்சி விட்டால் மாறுதல் தானே விளைகிறது. அதுவரைக்கும் எதற்கும் பின்வாங்காத போர்க்குணம் தேவைப்படுகிறது. இதைச் செய்ய பலவிதத் திறமைகளுள்ள தீரர்களே தேவைப்படுகிறார்கள். இவர்களைப் போன்றவர்களே சிறு பத்திரிகைத் துறையின் அல்லது சமுதாயத்தின் சகல துறைகளின் முழு மாற்றத்துக்குமான போராளிகள் ஆவார்கள். தனக்காகத் தன்னுடனேயே போராடுவது போலத்தான், சக மனிதர்களுக்காக இந்த பதிதர்களுடனேயே போராட வேண்டியிருக்கிறது. சரியானவர்கள் சரியும் போதெல்லாம் விமர்சிக்க வேண்டியிருக்கிறது. விமர்சனத்துக்கு அடங்காவிடில் ஒதுக்கவோ, ஒதுங்கவோ அல்லது எதிர்க்கவோ வேண்டியிருக்கிறது.'