100 முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். (குறள் 616) என்று கூறியுள்ளார். ஆயினும் இப்போது உண்மை சில இடங்களில் மாறுபடுவதையும் காண்கின்றோம். இரவு பகலாக உழைப்பவர்கள் வறுமையால் வாடுவதையும் சிறிதும் உழைக்காதவர்கள் செல்வச் செழிப்புடன் இன்புற்றுத் திகழ்வதையும் நாம் காணாமல் இல்லை. ஆகவே முயற்சியும் அது இல்லாததும் மட்டும் செல்வத்திற்கும் நல்குரவிற்கும் காரணங்கள் அல்ல என்பது புலப்படுகிறது. ஒரு சிலர்க்குப் பிறப்பிலேயே முன்னோர் ஈட்டி வைத்த செல்வம் கிடைத்துவிடுகின்றது. இங்கு முன்னோரின் முயற்சி இவர்கட்குப் பலனைத் தருகின்றது. இஃது உண்மையேயாயினும் ஒருவர் செல்வக்குடும்பத்தில் பிறந்து முயற்சியின்றியே செல்வராய் விளங்க மற்றொருவருக்கு அந்த வாய்ப்பில்லாமல் போவதையும் காண்கின்றோம். இதனால் ஒருவர் செல்வர் வீட்டு மகவாய்ப் பிறத்தலும் காரணம் இல்லாத நிகழ்ச்சியன்று என்பதை உணர வேண்டும். செல்வமும் ஒருவரிடம் என்றும் நிலைத்திருப்பதில்லை. நீங்கவும் காண்கின்றோம். அகடுற யார் மாட்டும் நில்லாது செல்வம் சகடக் கால் போல வரும் என்று நாலடியார் கூறுகிறது (அகடு என்பது நடுநிலை என்றும், சகடக்கால் என்பது சக்கரம் என்றும் பொருள்படும்). 'நல்வினை' உள்ளவரை ஒருவரிடம் செல்வம் தங்கும். அது நீங்கிய உடன் செல்வமும் நீங்கிவடும். ஆகவே உயிர்கள் அடையும் செல்வத்திற்கும் வறுமைக்கும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அவை முன் செய்த வினையே காரணமாகும். இவ்விடத்தில் ஓர் ஐயம் உண்டாகலாம். இன்ப துன்பங்களுக்கு முன் செய்த வினையே காரணமாயின் அவை முயற்சியின்றியே வருதல் வேண்டும். அவ்வாறின்றி முயற்சிக்குத் தக்கபடியே அவை உண்டாவது ஏன்? என்று வினவலாம். ஒரு காரியத்திற்குக் காரணம் ஒன்றே என்று கருதவேண்டா. பல காரணங்களும் இருக்கலாம். அவை அனைத்தும் உள்ளபோதே காரியம் நிகழும். ஓர் எடுத்துக்காட்டு இதனை விளக்கும். ஒரு செடி வளர்வதற்கு வித்து ஒன்று மட்டுமே காரணம் அன்று. நிலம், நீர், காற்று, கதிரவனது வெப்பம் முதலிய பலவும் காரணங்களாக
பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/108
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை