பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 ஐந்திணை என்றும் அழகாகக் கூறப்படும் 'காதல் ஒழுக்கமே' ஐந்திணை ஒழுக்கம் எனப்படும். தூய்மையான காதல் உயர்ந்த ஒழுக்கமாகும். விழுப்பம் தரும் ஒழுக்கமாகும். பண்டைத் தமிழர் தாம் வாழும் இடங்களை ஐந்து விதமாக இனம் கண்டனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பெயரிட்டனர். மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம் என்றும், அந்நிலத்து மக்களிடையே கனியும் காதல் ஒழுக்கம் 'குறிஞ்சித் திணை' என்றும் கூறப்பட்டது. காடும் காடு சார்ந்த வாழுமிடம் முல்லை நிலமாகும். இந்நிலத்தில் வாழும் மக்கள் காதல் ஒழுக்கம் ‘முல்லைத் திணை' என்று சொல்லப்பெறும். நீர் வளம் மிகுந்த வயலும் வயலை ஒட்டிய ஊர்களும் மருதநிலப்பகுதியாயின. மருதநில மக்களின் காதல் ஒழுக்கம் ‘மருதத் திணை' ஆயிற்று. கடலும் கடல் ஒட்டிய மணற்பரப்பும் நெய்தல் நிலப்பகுதியாகும். இங்கு வாழும் மீனவர் காதல் ஒழுக்கம் ‘நெய்தல் திணை' என்று அழைக்கப்படும். பாலை நிலம் மற்ற நிலங்கள் போல் தனித்தன்மை உடைய நிலப்பகுதி அல்ல. 'குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து, நல்லியல் பிழந்து நடுங்கு துயர் தரும் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்' என இலக்கியங்கள் கூறுகின்றன. பாங்கற்ற நிலத்தில் வாழும் மக்களிடையேயும் காதல் அரும்பும். பாலை நிலத்துக் காதல் ஒழுக்கம் 'பாலைத் திணை' என்று கூறப்படும். 'காதல்' என்ற சொல் பலவிதமானவரின் நெஞ்சிலே பலவிதமான கருத்தோவியங்களை எழுதி விடும் பாங்குடையது. பன்முகமுடையது. ‘காதல் அடைதல் உயிரியற்கை' என்றார் பாவேந்தர் பாரதிதாசன். இதைவிட அழகாக, இனிமையாக, சுருக்கமாகக் காதலின் இயற்கையையும் தேவையையும் யாரும் கூறிவிட இயலாது. காதலும் காதற்செயற்பாடுகளும் உயிரின் இயற்கையான வெளிப்பாடான செயல்களாகும். பாவேந்தரின் ஊனிலும் உயிரிலும் கலந்து நின்ற பாரதியார் வேதாந்தமாக விரித்துப் பாடிய குயில் பாட்டில் காதல் காதல் காதல் காதல் போயிற் காதல் போயிற் சாதல் சாதல் சாதல் என்று குயில் பாடுகிறது. காதல் எப்போது, யாரிடையே,எங்ஙனம் தோன்றும்? காதல் திட்டமிட்டு வரும் உணர்வன்று. தற்செயலாகத் தோன்றித்