பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பமே. காதல் இருவர் கருத்தொருமித்து உடலால் பொருந்துதல், காதல் பயிரை நன்கு வளர்க்கும். வள்ளுவர் காதல் வயப்பட்டவரைத் தலைவன் தலைவி என்று கூறுவார். இல்லறம் பூண்டவரை ஒருவருக்கொருவர் வாழ்க்கைத் துணை என்று தெளிவுபடுத்துவார். இல்லற ஒழுக்கத்தில் ஆணும் பெண்ணும் சரிநிகர். ஒருவருக்கொருவர் வாழ்க்கைத் துணையாய் அமைந்து இருவரும் தம்முள் மனமொத்துக் கலவி இன்பம் நுகர்தல் ஒரு தவமாகும். ஒரு வேள்வியாகும். வாழ்க்கைத் துணையை அணையும் தோறும் வாடிய உயிர் தளிர்க்கும்படியாகத் தீண்டுதலால் தலைவியின் தோள்கள் அமிழ்தால் செய்யப்பட்டதாகத் தலைவன் உணர்ந்தின்புறுகிறான். உறுதோறும் உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள். (குறள் 1106) 111 கண்ணால் பார்த்தும், காதால் கேட்டும், நாவினால் உண்டும், மூக்கால் மோந்தும், உடம்பால் தீண்டியும் துய்க்கப்பெறும் ஐம்புல இன்பம் கலவியின்பம். ஒளியுள்ள வளையல் அணிந்த இவளிடத்தே இன்பம் உள்ளன என்று தலைவன் மெய்யுறு புணர்ச்சியின் கூறுபாடுகளை எண்ணி எண்ணி மகிழ்கிறான். கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள. காதல் ஓர் அறம். காதல் ஒரு நோயும் ஆகும். அறமே நோயாதல் காதலில் மட்டுமே நடக்கும். நோயே மருந்தாதலும் காதல் களத்தில்தான். பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து (குறள் 1102) நோயுற்றான் அந்நோயைப் போக்கப் பயன்படுவது வேறொரு பொருளாகும். சிறந்த அணிகளையுடைய இத்தலைவியால் வந்த என் காதல்நோய்க்கு இவளே மருந்தாகிறாள். கலவியின்பமே, மெய்யுறு புணர்ச்சியே. அஃதாவது பாலியல் உறவே மனமொத்த கருத்தொருமித்த காதல் நோய்க்கு மருந்தாகும். ஐம்புல இன்பம் அனுபவித்தலால் விடுதல் அறியாவிருப்பம் மேலிடுகிறது. விடுதலறியா விருப்பமே காமம் என்று கூறப்படுகிறது. காமம் அல்லது