பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடற்புணர்ச்சி நிகழாவிட்டால் உயிர்க்குலம் தோன்ற வழிவகையில்லை. உயிர்க்குலங்கள் தோன்ற வழிவகுக்கும் பாலியியல் உறவு படைப்புக் கடவுளுக்கு உதவிபுரியும் பெரிய செயலாகும். புண்ணியச் செயலாகும். எனவே சிறுமை உடையதாகாது. பாலியல் உறவு என்பது உடல் அளவான இன்பம் மட்டுமன்று. ஆன்மீக உலகில் சிலர் அவ்வுறவினைச் சிற்றின்பம் என்று கருதினாலும் மனித வாழ்க்கை இவ்வுலகில் தொடர்ந்து நடைபெறுவதற்கும். ஒவ்வொரு உயிர் வகைகளுக்கிடையேயும் அன்பு பரிமாறிக் கொள்ளப்படுவதற்கும் அதுவே வாயிலாக அமைகிறது. ஒருதளமாக அமைகிறது. "தூய்மையான பாலியல் உணர்வு, பாலியல் உறவு யாரையும் கீழ்மை அடையவிடாது. ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் நிற்காது. எந்த உணர்வால், உயிர்கள் வாழ்வு பெறுகின்றனவோ எந்த உணர்வால் காதல் முழுமையாக அர்ப்பணிக்கப்படுகிறதோ, எந்த உணர்வால் மனித இனமும் பிறவும் தொடர்கின்றனவோ அந்த உணர்வு. அந்த உறவு வெட்கப்படவேண்டிய உணர்வு அன்று, பாவமான உணர்வுமன்று; உறவுமன்று" என்று தத்துவ அறிஞர் டாக்டர் இராதாகிருட்டிணன் மிகவும் தெளிவாகக் கூறுகிறார். 113 வயது முதிர முதிரக் கலவியில் ஈடுபாடு குறைந்துவரும். இறை நாட்டம் மிகுந்து வரலாம். கவியின்பத்தில் நிறைவடைந்து நீங்கலாம். காலம் கனியக் கனியத் தானாகவே காமம் மட்டுப்படும். முடைமாற்றம் உண்டாகும். மக்கள் வளர வளரப் பேரன் பேத்திகள் போன்றோர் வளர் வளர அவர்பால் மனம் கனியும். அவர் வளர்ச்சியில் நாட்டமும் ஈடுபாடும் ஏற்படும். இளம் வயதினருக்கு எடுத்துக்காட்டாக வாழவேண்டிய பக்குவம் ஏற்படும். வாழ்ந்த நிம்மதி ஏற்படும். அதுவே வாழ்வின் பயனாகும் என்று தொல்காப்பியர் கூறுகிறார். காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமம் சான்ற மக்களோடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (தொல் கற்பியல்) (கிழவனும் கிழத்தியும் = தாயும் தந்தையும் போன்றவர் பாட்டனும் பாட்டியும் போன்றவர்)