பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 வளரும் பருவத்தில் உள்ளவர்கள் உடலாற்றலும், அறிவாற்றலும் மன ஆற்றலும் உடையவர்களாக வளர்க்க இது அவசியமாகும். 'பாலியல் ஒழுக்கம்' ஒரு மர்ம தேசமாக இருக்கக்கூடாது. பசி, தாகம் போன்று பாலியல் வேட்கையும் உடலின் இயற்கையான கூறுகளில் ஒன்று என்று உணர்த்தப்படவேண்டும். பசி எடுத்தால் நல்ல உணவு அவசியமாகிறது. பசி எடுத்தால் சாக்கடையில் யாரும் உணவு தேடுவதில்லை. அதுபோல் பாலியல் உணர்வினை உரிய தருணத்தில் நல்ல திருமண உறவின் மூலம் தணித்துக்கொள்ளுதலே ஆண் பெண் இருபாலருக்கும் உடல் அளவிலும் உள்ளத்தளவிலும் பெரிய நன்மை தரும் என்று எடுத்துக்கூற வேண்டும். பாலியல் ஒழுக்கம் இல்லறம் ஏற்க இருப்பவர்கட்கு மிகவும் அவசியமாகும். இல்லறம் என்னும் மாளிகையின் இனிமையான இயற்கையான அடித்தளம் அமைவதற்குப் பாலியல் ஒழுக்கம் இன்றியமையாததாகும் என்பதை மீண்டும் மீண்டும் அறிவுறுத்துவதில் தவறில்லை. மனித வளம் காக்க இளைஞர் வளம் பேணப் பாலியல் கல்வி மிகவும் அவசியமாகும்.