பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ஓயாது மாறி மாறி அமைந்து வருகிற பிரபஞ்சம் அமிர்த சொரூபமாகவும் மல சொரூபமாகவும் மாறி மாறி அமைகிறது. நாம் உணவு உண்கிறோம். இந்த உணவு அமிர்தம். இது உடல் வளர்ச்சிக்குப் பயன்படுகிற பகுதியாகவும், பயன்படாத பகுதியாகவும் பிரிவுப்படுகிறது. பயன்படாத பகுதி மலம் எனப்படுகிறது. அது பிரிந்து வெளியேறாவிட்டால் உடலுக்கு ஆபத்து. அமிழ்தமாக இருக்கும்போது அருந்தப்படுகிறது. பின்பு மலமாகும்போது கழிக்கப்படுகிறது. இவ்வாறே காற்றும் நீரும் கழிவுப்பொருளாகின்றன. "உண்டது மலமாகும் அணிந்தது அழுக்காகும்" என்பது ஒரு பழமொழியாகும். இங்ஙனம் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள பொருள்கள் அமிர்தமாகவும் மலமாகவும் மாறி மாறி அமைந்துவருவது வெளிப்படை. உயிர் வாழ்க்கைக்கு உறுதுணையாவது அமிழ்தம். வாழ்க்கையை அழிக்கவல்லது மலம். அமிழ்தத்தை ஏற்று மலத்தை விலக்குவதன் மூலம் உயிர் வாழ்க்கை நிலைபெறுகிறது. ஆயினும் உயிர் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் மலம் (அழுக்குகள்) ஒன்றுசேர்ந்து முன்னணியில் நின்று, உடல் வாழ்வை முடிவுக்குக் கொண்டு வருகிறது. இவ்வாறு அமிர்தமும் மலமும் மாறியமைவது இயற்கையின் அமைப்பு என்பதை அறிபவர் மலம் என்னும் தத்துவத்தை அறிபவர் ஆகின்றனர். இப்பிரபஞ்சம் மாயை என்பது தெளிவானது. சீவன் பலகோணப் பிறவிகளில் பரிணமித்துப் பக்குவமாகிக் கொண்டு வரும்போது மாயா சக்தியானது தாயின் நிலையிலிருந்து அச்சீவாத்மாவைப் பேணி வருகிறது. அப்படி படிப்படியாகப் பக்குவப்படுத்தி வரும்நிலையில் மாயையை மலம் எனல் ஆகாது. இதற்குத் தக்கதோர் உபமானம் எடுத்துக் கொள்வோம். தாயின் கருப்பையில், சிசுவானது உருப்பெற்று வளர்கிறது. அப்படி உருவெடுத்து வளர்ந்து வரும்பொழுது தாயின் கர்ப்பம் போற்றுவதற்குரிய துணையாகிறது. கர்ப்பப்பையில் உள்ள குழந்தை முழு வளர்ச்சியடைந்தவுடன் கர்ப்பப்பையை விட்டு வெளியே வரவேண்டும். வந்தேயாக வேண்டும். அப்பொழுது வளர்த்த கருப்பை. அச்சிசுவுக்கு மலமாகிறது. அதாவது வேண்டாத இடமாகிறது. அந்த மலத்தினின்று வெளியேறாவிட்டால் சிசு அழிந்துவிடும். இதே பாங்கில், மாயை என்னும் பிரகிருதித்தாய் சீவாத்மனை வளர்த்துப் பக்குவப்படுத்திப் பரமாத்மனிடம்