6 நியாய தத்துவமும், வைசேடிக தத்துவமும் உலக அனுபவங்களைக் கூறுபடுத்திக் கொடுக்கின்றன. அவை உலகப் பொருள்களைச் சிற்சில வகைகளாக வரிசைப்படுத்தியுள்ளன. அணுக்கள், பரமாணுக்கள் ஆகியவற்றால் சரீர சம்பந்தமான உலகம் படைக்கப்பட்டிருக்கிற விதத்தை விளக்குகின்றன. சாங்கியம் உளநூல் பண்பினை உடையது. மனத்தின் செயல்கள் அல்லது எண்ண அலைகள், தியானம் ஆகியவற்றைக் கையாளும் முறைபற்றி யோகம் எடுத்துரைக்கின்றது. மனத்தையும் புலன்களையும் ஒரு கட்டிற்குள் கொண்டு வருவதற்கு உரிய வழிமுறைகளை யோக ஏற்பாடு கற்பிக்கிறது. ஒவ்வொரு தத்துவமும் ஞானத்தின் மூலம் அஞ்ஞானத்தை, பொய்யறிவை ஒழிப்பதிலேயே கண்ணுங்கருத்துமாய் உள்ளன. அதன் பின்னரே ஒருவன் அழியாத்தன்மையையும் நிலையான பேரின்பத்தையும் அடைகின்றான். நியாயம், வைசேடிகம் ஆகியவை வேதங்களை உயரிய அதிகாரம் பெற்றதாக ஒப்புக்கொண்ட போதிலும் அவைகள் பகுத்தறிவின் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளன. மனித அறிவு பலவீனமுடையது. பிழைப்படக்கூடியது. வரம்புடையது. அதற்கென்று சொந்த எல்லையுடையது. அது காலம், வெளி அல்லது இடம், காரணம் ஆகியவைகளால் அடைக்கப்பட்ட வேலிக்குள் செயல்படுகிறது. பகுத்தறிவின் கண்டுபிடிப்புகள் தீங்கு விளைவிக்காது. எனினும் உலகியல் அறிவுக்கு மேற்பட்ட விஷயங்களைத் தீர்க்கும் ஆற்றல் உடையதாக இல்லையென்று ஆன்மீக உலகம் கருதுகின்றது. எல்லா அறிவும் நான்கு எல்லைகளாகக் குறித்துக் காட்டுகின்றன. அவை, 1. அறிபவன் (கர்த்தா) 2. அறியப்படும் பொருள் (பிரமேயம்) 3. அறிவதன்மூலம் உண்டாகும் பயன்தரும் நிலை (பிரமிதி. 4. அறிவுக்கான வழி (பிரமாணம்) என்பவையாம். நேர்மையான அறிவினால் பெறப்படும் பொருள்கள் பன்னிரண்டு என்று கூறப்படுகின்றது. அவை 1. 2. உடல் ஆத்மன்
பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/14
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை