பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 உடம்பு கோசங்கள் எனும் அடுக்குகளால் ஆனது. கண்ணுக்குப் புலனாகும் அன்மைய உடம்பு முதல் கோசம். அன்மைய கோசத்தில் பிராணமய கோசமும், பிராணமய கோசத்தில் மனோமய கோசமும், மனோமய கோசத்தில் விஞ்ஞான மய கோசமும், அதனில் ஆனந்த மயகோசமும் ஒன்றுள் ஒன்றாக அழகாக அமைந்துள்ளன. பிராணமயம் காற்றுடன் செயல்படும் சக்தி ஓட்டமாகும். முறையான தியானப் பயிற்சியின் மூலம் இந்தக் கோசங்களை அழகாக உணரமுடியும். உடல், மனம், சக்தி ஆகிய மூன்றும் ஒன்றாக ஓருடலில் ஏழு இடங்களில் சந்தித்துக் கொள்கின்றன. இவைதான் சக்தி மையங்களி. இவைகளே ஆதாரங்கள் என்றும் சக்கரங்கள் என்றும் இயம்பப்படுகின்றன. உடல், மனம், சக்தி ஆகிய மூன்றும் சக்கரங்களில் பின்னிப்பிணைந்து சக்தி ஓட்டத்திற்கு ஒரு ஒழுங்கை ஏற்படுத்துகின்றன. இவைகளை ஆராய்ச்சிப் பொறிகளின் வாயிலாகக் கண்டறிய இயலாது. குருவின் வழிகாட்டுதலின்படி தியானப் பயிற்சியின் மூலம் இச்சக்கரங்களை விழித்தெழச் செய்யலாம். இவை அளவு கடந்த நன்மையையும் ஆனந்தத்தையும் தரவல்லவை. இச்சக்கரங்கள் முதுகெலும்பின் அடி நுனியிலிருந்து உச்சந்தலை வரை வரிசையாக அமைந்திருக்கின்றன. அவை, 1. மூலாதார சக்கரம் (Root Chakra) 2. சுவாதிஷ்டான சக்கரம் (Spleen Chakra) 3. மணிப்பூர சக்கரம் (Navel Chakra) 4. அனாகத சக்கரம் (Heart Chakra) 5. விஷுத்தி சக்கரம் (Throat Chakra) 6. ஆக்ஞா சக்கரம் (Brow Chakra) 7. சஹஸ்ரார சக்கரம் (Crown Chakra) என்பனவாம். வினையின் அளவாக, விளைவாக உடம்பெடுத்த உயிர்களுக்கு இயல்பாக இச்சைகள் இருக்கின்றன. அவையாவன: புத்திர இச்சை, லோக இச்சை, அர்த்த இச்சை என மூன்றாகும். புத்திர இச்சையின் குணமானது பொருள்மேல் ஆசை கொள்ளுதல். மண்ணாசை, பெண்ணாசை. மற்றும்