பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளாசை என விரியும். லோக இச்சையின் குணமானது உலகத்தில் உயர்ந்த காணியாட்சியை விரும்பல். நெடுநாள் உறவின் முறையாருக்குத் தக்கவற்றையும் தகாதவற்றையும் எடுத்துக்கூறுதல். பொருந்தி வரும் காரியங்களைத் தெரிந்து அதன்மேல் ஆசை வைத்தல். காரியங்களைச் செய்து நன்மை, தீமை அறிதல் என்பதாக அமைகிறது. அர்த்த இச்சை மேன்மேலும், பொருள், பணம் ஆகியவற்றைச் சேர்ப்பதில் ஈடுபடுத்தும். அன்பைப் பெருக்கி இன்பமுண்டாக்கும். இவ்வாறு தொண்ணூற்றாறு தத்துவங்களில் ஒரு சிலவற்றிற்குத் தேவையான அளவில் விளக்கம் கூறப்பட்டுள்ளது, பிற வேண்டிய இடங்களில் தக்கவாறு விளக்கப்படும். கூறாதுவிடப்பட்டவை, அன்புடைய குருவை நாடி அவர் வழி நின்று கற்றறிய வேண்டியவையாம். இத்தத்துவங்கள் யாவும் சாதி, சமயம், இனம், மொழி கடந்து மனித இனம் முழுவதற்கும் பொதுவானவை. இவற்றை அறிந்து, உணர்ந்து அதன்வழி நடப்பவர்கள் வாழ்வில் உயரிய நிலையை அடைந்து நிலையான பேரானந்தத்தில் அழுந்தலாம். தமிழில் தத்துவம் தத்துவ என்பது வாழும் கலைக்கு ஆதாரமானது. நின்ற உண்மையாக விளங்கும் தத்துவங்களை இந்தியத் திருநாட்டின் மிகவும் தொன்மையான மொழிகளான செம்மொழியாம் தமிழிலும், வடமொழியிலும் பிற இந்திய மொழிகளிலும் எழுந்த நூல்களில் காணலாம். வடமொழியில் மட்டுமே தத்துவ நூல்கள் உள்ளன என்று சிலர் வன்முறையாகக் கூறுவர். தமிழ்மொழியின் ஆழ அகலங்களை அறியாத பலர். எல்லாம் வடமொழியிலே உள்ளன என்று கூறும் வழக்காறு உள்ளது. இது ஒரு தலையானதாகும். தமிழும், வடமொழியும் ஆழங்கால் பட்ட அறிஞர் பெருமக்கள் இரண்டிலும் தத்துவம் பற்றிய அருமையான கருத்துகளும் விளக்கங்களும் இருப்பதை உணர்ந்து கூறியிருக்கின்றனர். தமிழறியாத நெஞ்சினர் ஒரு சார்பாக நினைத்துக் கொண்டிருப்பது தமிழ் மக்களுக்குப் பெரிதும் வருத்தம் உண்டாக்கும் மனப்பான்மையாகும். வடமொழியும், தென்மொழியாம் தமிழும் வரலாற்றுத் தொடர்புடையவை. ஒன்றை உயர்த்தியும் மற்றொன்றைத் தாழ்த்தியும் பேசுவது எவ்வகையிலும் நன்றன்று. ஒவ்வொரு மொழிக்கும் அதனதன்