24 மாமழை போற்றுதும் ! மாமழை போற்றுதும் நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல் மேல்நின்று தான் சுரத்தலான். பூம்புகார் போற்றுதும்! பூம்புகார் போற்றுதும்! வீங்குநீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு ஓங்கிப் பரந்தொழுக லான். இப்பாடலடிகளின் பொருள் அறிந்து இன்புறுவது கடமையாகும். இனிநிரலாகப் பொருள் கூறப்படுகிறது. திங்களைப் (சந்திரனை) போற்றுவோம்! பூந்தாது சொரியும் ஆத்தி மாலையினையுடைய சோழனின் அருள்மிகுந்த வெண்கொற்றக் குடையினைப் போன்று, அதுவும் இந்த அழகிய உலகிலே தண்ணொளி பரப்புகின்றதனால், நாமும் அந்தத் திங்களைப் போற்றுவோம். ஞாயிற்றைப் போற்றுவோம்! காவிரி நாடனின் ஆணைச் சக்கரம்போல். அழகிய மலைமுகடுகளை உடைய மேருமலையினை அதுவும் சுற்றி வலம் வருகின்றதனால். நாமும் அந்த ஞாயிற்றைப் போற்றுவோம்! பெருமை பொருந்திய மழையைப் போற்றுவோம்! அச்சந்தரும் கடல்களை வேலியாக உலகம் சூழ்ந்துள்ளது எனினும், அவன் அருளைப் போலத் தான் மேல்நின்று சுரந்து. அனைத்துயிரையும் வாழ்விக்கின்றதனால். நாமும் பெருமை மிகுந்த அந்த மழையைப் போற்றுவோம்! அழகிய புகார் நகரினைப் போற்றவோம்! மிகுதியான நீர் வேலியாகச் சூழ்ந்துள்ள உலகிற்குச் சிறப்புடைய சோழனின் மரபினரோடு தானும் (புகாரும்) புகழாமல் உயர்ந்து பரவிய புகழுடன் அதுவும் நிலவுவதால், நாமும், அந்த அழகிய புகார் நகரினைப் போற்றுவோம்! திங்களும், மழையும், மன்னனும் ஞாயிற்றின் பிள்ளைகளே. ஞாயிறு போற்றியதில் மழையும், திங்களும் உடன் போற்றப்பட்டன. நயமிக்க உத்தியாகும்; எண்ணி மகிழ்வோம். இளங்கோவடிகள் போற்றிப் பாடிய ஞாயிறு இயற்கைப் பொருள்கள் எல்லாவற்றையும் விட மிகவும் உயர்ந்தது. ஞாயிறு என்று நற்றமிழால் அழைக்கப்படுகின்ற, பாடப்படுகின்றவனாகிய சூரியன் இயற்கையுடன் வைத்திருக்கும் நல்லிணக்கமே, சமய ஒழுக்கம் ஆயிற்று.
பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/32
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை