பேரா. முனைவர் கரு. அழ. குணசேகரன் இயக்குநர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை-600 113 அணிந்துரை மனித வாழ்வில் அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றையொன்று போட்டியிட்டுக் கொண்டுவருகின்றன. அறிவியல் சொல்வதும் சரியா கப்படுகிறது. ஆன்மிகம் கூறுவதும் சரியாகப்படுகிறது. காரணகாரியங்களுடன் அறிவியல் சொல்கிறது. அனுபவங்களின் அடிப்படையில் ஆன்மிகம் சொல்கிறது. இந்நிலையில் இரண்டுமே இருசாரார்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அறிவியல் அறிவு சார்ந்தது; ஆன்மிகம் சமய நம்பிக்கை சார்ந்தது. அறிவியலோ வியாபாரமயம் ஆக்கப்படவில்லை, ஆனால் ஆன்மிகமோ அண்மையில் வியாபாரமயம் ஆக்கப்பட்டு வருகிறது. அறிவியல் சாதித்திருப்பதை ஆன்மிகவாதிகளும் பயன்படுத்திக் கொண்டு வியாபார மயமாக்கிச் சுயஇலாபம் அடைகின்றனர். இவ்வாறு அறிவியலார் ஒருபக்கமும் தத்துவஞானிகள் ஒருபக்கமுமிருந்து மனித வாழ்வைச் செம்மைப்படுத்துகின்றனர். தத்துவம் என்பது சமயம் சார்ந்ததோடு மட்டுமல்லாது பல்வேறு சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டுள்ளது. ஆதலால் அது ஆன்மிகத்தின் ஒருபகுதியாகிறது. உலகத்தோற்றம் பற்றி அறிவியலும் கூறுகிறது. ஆன்மிகமும் கூறுகிறது. அதுபோன்றே உயிர்களின் தோற்றம் பற்றியும் இரண்டு விதக் கருத்துகள் உள.
பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/4
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை