பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருத்துவர். உணவு மருத்துவர் திருவள்ளுவரின் கருத்துக்களை நான் மறைகளும் அவற்றின் பிழிவாகிய உபநிடதங்களும் ஒத்துக்கொள்கின்றன. இந்த வடமொழி நூல்கள் உணவே படைப்புக் கடவுள், பிரம்மன் என்று வலியுறுத்திக் கூறுகின்றன. 39 உடம்புக்கு இயல்பாகிய நோய் மூன்று வகையினதாகும். அவை வாதம், பித்தம், சிலேத்துமம் எனப்படுகின்றன. இம்மூன்றும் நோயாகி வருத்துவதற்குக் காரணங்கள் இரண்டு. சுவை, வீரியம், அளவு இவைகளை அறியாமல் உணவருந்தும் பழக்கம் ஒரு காரணம். மனம், மொழி,உடல் ஆகிய மூன்றும் ஒத்துப்போகாமல் செய்யும் தொழில்கள் இரண்டாவது காரணம். ஒரு வேளை பசி எடுத்த உடன் உணவு உட்கொள்ளுகிறான் ஒருவன். மீண்டும் உணவு உண்ண வேண்டுமாயின் முன்னர்ச் சாப்பிட்ட உணவு முற்றிலும் செரித்துத் தீர்ந்து விட்டதா என்பதை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? மீண்டும் நல்ல பசி எடுக்க வேண்டும். நல்ல பசி இருந்தால் உடல் களைப்படைவது போல் தெரியும். அறிகுறிகளால் நல்ல பசிதான் என்று உறுதிப்படத் தெரிந்துகொண்டபின் அவன் உண்ணலாம். இப்படி உண்டால் அவன் நலமாக இருப்பான். எந்த நோயும் அண்டி வருத்தாது. பசியறிந்து உண்ட உணவே நோய் வருமுன் காக்கும். தடுப்பு மருந்தாகி உடலைப் பிணியின்றிப் பாதுகாத்து வளமாக்கும். மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் (குறள் 942) நீண்டநாள் வாழ்ந்து எய்த வேண்டிய பேறுகளை அடைய விரும்பும் ஒருவன் முன்னர் உண்டது செரித்த பின், இனிச் செரிக்கும் அளவினை நன்குணர்ந்து அதற்கேற்ப உண்ண வேண்டும். எத்தனையோ பிறவிகட்குப் பிறகு மானிடப் பிறவி வாய்க்கிறது. எனவே மனித உடம்பைப் பெற்றவன் நெடுநாள் வாழும் நெறியை அறிய வேண்டும். நெடுநாள் வாழும் நெறி நல்ல உணவு நெறியாகும். அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு பெற்றால் நெடிதுய்க்கும் ஆறு குறள் 943) முன் உண்டது முற்றிலும் செரித்து விட்டதையும் செரித்தலின் பயனாகிய 'இரதம்' சற்று தாமதித்தே ஆறும் ஆதலின் அதுவும்