44 இயக்கவல்லது. தசைக்கட்டுகளின் வலிமையை உறுதிப்படுத்தி . ஒழுங்குபடுத்துவது. பிராணனின் ஒரு கூறு உடலின் பௌதீக சக்திகளுடன் தொடர்பு வைத்துக்கொள்கிறது. மற்றொரு பகுதி ஆத்ம சக்தியுடன் தொடர்பு வைத்துக் கொள்கிறது. சரீர சக்தியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் பிராணனின் பாகத்திற்கு ஞானத்தை அடைவது மிகவும் சுல்பமாகும். ஆனால் ஆத்மாவின் சக்தியுடன் பிராணனின் செயலை அறிவது அவ்வளவு எளிதானதன்று. மனிதனின் இச்சா சக்தியால் தூண்டப்படும் பிராணன். உடலுக்கு ஆரோக்கியம் தரும் சக்தியாக மாறுகிறது. நம் உடல் ஐந்து அடுக்குகளால் (கோசங்கள்) ஆனது. ஒவ்வொன்றும் ஒரு விலைமதிப்பற்ற சொத்தாகும். அன்னமய சரீரம் பிராணமய சரீரம் மனோமய சரீரம் விஞ்ஞானமய சரீரம் ஆனந்தமய சரீரம். என்பவையே அவை. இவ்வைந்தில் பிராணமய சரீரமே மிகவும் தலையாயதாகக் கருதப்படுகிறது. மிகவும் பிரியமான சரீரம் என்று கூறப்படுகிறது. வடமொழியில் பிராணமய சரீரம் 'ப்ரிய தனு' என்று கூறப்படுகிறது. எல்லோரும் பிராணமய உடம்பையே மிகவும் அதிகமாக விரும்புகிறார்கள். அம்மாதிரியே அபானனும் மனிதனால் விரும்பப்படுகிறது. பிராணனால் சக்தி வளர்கிறது. அபானத்தினால் உடம்பில் உள்ள நஞ்சு நீங்குகிறது. அதனால் உடம்பு தூய்மையாகிறது. பிராணன் தன்னில் ஒரு மருத்துவ ஆற்றலைப் பொதிந்து வைத்துள்ளது. இந்த மருத்துவ ஆற்றலே உடலில் உள்ள விஷத்தனமான சக்திகளை வெளியே கொண்டுபோக உதவுகிறது. பிராணனின் இந்தப் புனிதமான செயலால், 'பிராணன்' ஒரு மருத்துவனும் ஆகிறது. ஒரு தாயும் தந்தையும் எப்படித் தம் பிள்ளைகளைப் பாசத்துடனும், ஆசையுடனும் வளர்ப்பார்களோ அவ்வாறே பிராண சக்தியும் நம்மை வளர்க்கிறது. அப்பிராண சக்தியை மேலும் மேலும் வலுப்படுத்தும் பயிற்சிகள் பிராணாயாமம் எனப்படுகின்றன.
பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/52
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை