பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஆகியவற்றை விரட்டுகின்றன. வைட்டமின் 'டி' சூரியனில் உள்ள புற ஊதாக் கதிரில் உள்ளது. இப்பயிற்சியினால் நுரையீரல்கள், இதயம், வயிறு ஆகியவை சுத்தமடையும். நுரையீரல்கள் சுவாசிக்கும் தன்மை அதிகப்படும். சுவாசம் சீரடையும். பிராண சக்தி வலிமை பெறும். இப்பயிற்சியைக் காலையில் அரை மணிநேரமும், மாலையில் அரைமணி நேரமும் செய்யலாம். நன்கு பயிற்சி பெற்றபின் நேரத்தை நீட்டிக் கொள்ளலாம். நாள்தோறும் இடைவிடாமல் தொடர்ந்து இப்பயிற்சியைச் செய்து வந்தால் உன்னதமான பிராணமய சரீரம் அமைவதை உணரமுடியும். பிராணயாமப் பயிற்சியினால் நற்பயன்கள் விளைகின்றன. மேல் மூளைப் பகுதியை அதிகமாகச் செயல்படவைக்க முடியும். இதனால் மூளையின் சுவாசமண்டலப் பகுதியைக் கட்டுப்படுத்தித் தீய செயல்களுக்குக் காரணமாயுள்ள ஹைப்போதாலஸ் பகுதியை அடக்கியாளவும் முடியும். இரத்தம் சுத்தமடைந்து உடல் முழுவதும் பரவமுடிகிறது. உடலிலுள்ள சுரப்பிகள் நன்றாக இயங்கும் திறனைப் பெறுகின்றன. அளவுக்கு மீறிய உணர்ச்சிகள் ஏற்படா. நியாய உணர்வு மேலோங்கும். பொறுமை, அன்பு, நட்பு போன்ற உயர்ந்த குணங்கள் மலரும். சண்டையிடும் மனப்பான்மை மறையும். மன்னிக்கும் குணம் வரும். தியாக உணர்வு மேலோங்கும். மனிதன் நிலை இழக்காமல் இருந்தால் மூளையின் சக்தி வீணாகாமல் பலம் பெறும். பல்வேறு காரணங்களால் ஏற்படும் இறுக்கநிலை குறைந்து உடல் மன அமைதி பெறும். இதனால் முகத்தில் ஒரு தேஜஸ் தோன்றும். கண்கள் பளிங்கு போல் ஒளிரும். களைப்பில்லாமல் அதிக நேரம் இன்முகத்துடன் பணியாற்ற முடியும். பிராணாயாமம் ஒன்றே நம் உடலில் உள்ள சக்தியைக் கட்டுப்படுத்தும் வல்லமை உள்ளது. பிராணனைக் கட்டுப்படுத்த அறிந்த ஒருவன் உலகில் எல்லாச் சக்திகளையும் கட்டுப்படுத்த வல்லவனாகிறான். சுவாசத்தைக் கட்டுப்படுத்துபவனுக்கு மனத்தையும் கட்டுப்படுத்துவது எளிது. இதில் எது குறைந்தாலும் மற்றதும் குறையும். பிராணாயாமம் பயில்பவருக்கு நல்ல தோற்றம், மகிழ்ச்சி, உயிர்ச்சக்தி, நல்ல பலம், மனதை ஒரு முகப்படுத்தும் வல்லமை, மனோதிடம் ஆகிய பண்புகள் படியும். உடற்கூற்று அறிவியலின்படி ஒருவனது ஆயுள் அவன் வயதைப் பொறுத்தது அல்ல. மாறாக அவன் விடும்