பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்க்கரை இனிக்கிறது என்று பலதடவை சொன்னாலோ எழுதினாலோ இனிப்புச் சுவையை அறிய முடியாது. சர்க்கரை நாவில் படும் போதுதான் இனிப்பை அனுபவிக்க முடியும். பரம்பொருளிடத்தில் இருந்து வருகின்ற பேரானந்தத்தின் நிழல்கள் போன்று ஏட்டுக்கல்வி ஆனந்தம் அமைந்துள்ளது. இவை அனைத்தையும் ஒதுக்கிவிட்டு இறைவனுடைய பேரருளுக்குப் பாத்திரமாகின்றவர்களே பேரானந்தத்தை அனுபவிக்கின்றனர். இனி,மனிதனின் ஐந்து அடுக்குகளால் சூழப்பெற்ற உருவம் பின்வருவதாக விளக்கப்படுகிறது. (1) அன்னமயகோசம் பிராணமயகோசம் (3) மனோமயகோசம் ● (4) விஞ்ஞானமயகோசம் (5) ஆனந்தமயகோசம் 79 அன்னமயகோசம் உணவினால் பராமரிக்கப்படும் பகுதி, பகிர் முக கருமம் (புறச்செயல்கள் செய்யும் உடம்பு ஆத்ம சாதனத்திற்கும். பிறவற்றிற்கும் அடிப்படையானது (உபாயமானது). பிராணமய கோசம் பிறந்தவுடனே மூச்சுக்காற்றோடு உடலுக்குள் நுழைந்து ஆற்றல் ஓட்ட மண்டலமாகப் பணிபுரிகிறது சக்கர தியானத்தின் மையம். . மனோமய கோசம் மூச்சோடு பின்னிப் பிணைந்தது மனோவேகம், மூச்சுவேகம், மூச்சுவேகம் மனோவேகம், புத்தி, சித்தம், அகங்காரம், ஆசை, சங்கல்பம், விகல்பம் என்பனவற்றிற்குத் தளமாய் அமைந்து மனிதனை ஆட்டுவிப்பது. விஞ்ஞான மய கோசம் மனத்தோடு பொருந்தியும் பொருந்தாமலும் இருவிதமாகச் செயல்படும் அடுக்கு. நல்லதன்பால் செல்லும். வாழ்க்கை வசதிகளைத் தேடும் முயற்சியை உடையது. வளர்ச்சிக்கு