பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 உபயமானது. கல்வி வேள்விகளால் சிறப்படையும் அடுக்கு. (ஆத்ம சாதனத்திற்கு இது அவசியமானது). ஆனந்தமயகோசம் முதல் மூன்று கோசங்களும் அடுக்குகளும்) தூய்மையடைந்த பின் அனுபவத்திற்கு வரும். மனிதனின் மூலநிலை, மூலசொரூபம் ஆனந்தமயமானது. III. தியானத்தின் அவசியம் / நோக்கம் மனிதனின் மூலநிலை அதாவது மூலசொரூபம் ஆனந்தமயமானது. அது மனப்பேயின் செயல்களால் மறைக்கப்பட்டிருக்கிறது. மனிதனின் மூல சொரூபத்தை உணர்த்தி உய்ய வைக்கும் மார்க்கம் தியானப்பயிற்சி. தொடக்க நிலையில் தியானம் உள்ளத்தையும் உடலையும் சீர்படுத்தும். அவசியம் ஏற்பட்டால் செப்பனிடும். மீண்டும் சீர்படுத்தும். இரண்டிலும் ஓர் அமைதியும் இனிமையும் உண்டாகும். பின்னர்ப் படிப்படியாக மனத்தின் கூத்துகள் குறையத் தொடங்கும். மனத்தின் வலிமை குன்றும். ஒரு நாள் மனம் முற்றிலும் செயலற்று ஒடுங்கிவிடும். அடக்கப்படுதல் அன்று) மனம் தன்வழியிலேயே செயல் ஒழிந்து நிற்கும். இந்த நிலையே நிஷ்டை என்றும் சகஜ நிஷ்டை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் காலம், இடம், நிகழ்ச்சிகள் யாவும் பொருளற்றவை ஆகிவிடும். எல்லாக் கருமங்களும் தற்செயலாய் நடக்கும். அடுத்து மனம் மேலும் மேலும் ஒடுங்கித் தன் சொரூபத்தை இழந்து உயிரில் உயிராய் நிற்கும். ஆன்மாவில் நிற்கும். ஆத்ம தரிசனம் நிகழும். இந்நிலையே துரியம், வீடுபேறு, முத்தி, பிரம்மானந்தம், பிரம்ம நிலை, நிர்விகல்பசமாதி எனப் பலவாறு கூறப்படுகிறது. பிரம்மானந்தம் அல்லது பேரின்பம் உள்ளிருந்து அனுபவிக்க வேண்டியது. புற அனுபவம் அன்று. தியானம் இதற்கு உதவும்.