82 நலியும். உடல் நலிதல் தீமையாகும். பாவமாகும். குறித்த இடத்துக்குப் போக வேண்டும் என்றால். வாகனம் வேண்டும். அதுபோல வாழ்க்கையின் குறிக்கோளை, இலட்சியத்தை அடைவதற்கு உடல் வாழ்க்கை முற்றிலும் இன்றியமையாததாகிறது. உடலைக் காப்பாற்றி வைப்பதே பெரும்பயணம் போவதற்கு ஒப்பாகும். கருமத்தால் அன்றி இது நிறைவேறாது. மேம்பட வாழ விரும்புபவர் ஓயாது கருமம் அதாவது செயல் செய்தே ஆக வேண்டும். நித்திய கர்மம் மட்டும் போதுமானதல்ல. ஒருவன் தான் அடைந்திருக்கின்றதைக் காப்பாற்றி வைப்பதற்கு மட்டும் நித்திய கருமம் பயன்படும். மேலே போக, மேம்பட அது மட்டுமே போதாது. குழந்தையாயிருக்கும்போது தவழ்தல் நல்ல கருமமாகும். அதோடு நின்றுவிட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படாது. நிற்கவும் நடக்கவும் ஓடவும் ஆகிய புதியனவற்றில் குழந்தை பயில வேண்டும். அதுபோல மனிதன் வாழ்க்கையில் முன்னேறுவதற்குப் புதிய புதிய கர்மங்களைச் செய்கிறான். அதனால் கருமத்தில் கட்டுண்டவன் ஆகிறான். கருமபந்தம் மனிதனுக்கு உகந்தது அல்ல. கர்மம் செய்து கொண்டே கருமபந்தத்தில் கட்டுப்படாமல் இருக்கும் வித்தையைக் கற்றுக்கொள்ள வேண்டும். கர்மத்தில் மூன்று நிலைகள் அல்லது மூன்று இயல்புகள் இருக்கின்றன. அவை பறித்து வாழ்தல் (வென்று வாழ்தல்), வகுத்து வாழ்தல், பங்கிட்டு வாழ்தல் (படைத்து வாழ்தல்) என்பனவாம். கடைநிலையில் உள்ள உயிர்கள் பறித்துப் புசித்து உயிர் வாழ்கின்றன. இந்நிலையில் வாழ்க்கை என்பது ஓர் ஓயாத போராட்டம். வலிமை உடையது முன்னணிக்கு வருகிறது. வலிவற்றது பின்னணியில் வருந்தி வாழ்கிறது. அல்லது அறவே அழிக்கப்படுகிறது. வென்று வாழ்வதை (பறித்து வாழ்தலை)க் கோட்பாடாகக் கொண்டு பிழைத்தல் கடைத்தரமானது. பறித்து வாழ்பவர் தங்களுக்குத் தருகிற மதிப்பை மற்ற உயிர்களுக்குத் தரமாட்டார்கள். பிறரை அடக்கி ஒடுக்குதலிலேயே அதிக நாட்டம் கொண்டிருப்பவர் தன்னலம் மிகுந்து, தன்னடக்க மில்லாமல் சச்சரவுகளில் ஈடுபடுவர். போராட்டதில் குறியாய் இருப்பார். பிறர் துன்பப்படுதலைக் கண்டு, வருத்தப்படமாட்டார். அவர்களும் துன்பத்தில் ஆழ்வர். ஆயினும் அதை உணரும் பக்குவம் இல்லாதிருப்பர். உலகில் இதுநாள்வரையிலும் நடைபெற்ற போர்கள் எல்லாம்
பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/90
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை