பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

93







எ) ஓரிரு தொடரில் விடை கூறுக.

1.

ஒரு தொடரில் இடம்பெறவேண்டிய இன்றியமையாத உறுப்புகள் யாவை?

2. 'நான் சிரித்தேன்' - இத்தொடரைச் செயப்பாட்டு வினைத் தொடராக மாற்ற இயலுமா? இயலாதெனில் காரணம் கூறுக.

3. கண்ணன் மிதிவண்டி ஓட்டினான் - இத்தொடரைப் பொருள் மாறாமல் எதிர்மறைத் தொடராக்குக.

4. கலைவாணி பாடல் பாடினாள்.- இத்தொடரிலுள்ள எழுவாய், செயப்படுபொருள், பயனிலை மூன்றிலும் வினா எழுத்தைப் பயன்படுத்தி, வினாத்தொடர்கள் உருவாக்குக.

5. பின்வருவனவற்றுள் எது பிழையான தொடர்?

அ) பறவைகள் பறந்து சென்றன.

ஆ) பறவைகள் பறந்து சென்றது.

6. ஓர் எழுவாய், ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது எத்தகைய தொடர்?

7. ஓர் எழுவாய், பல பயனிலையைக் கொண்டு முடிவதற்கு எடுத்துக்காட்டு தருக. 8. தோன்றா எழுவாய்க்கு இரண்டு எடுத்துக்காட்டு தருக.

9. நேர்கூற்றுத் தொடர் ஒன்றை உருவாக்கி, அதனை அயற்கூற்றாக மாற்றிக்காட்டுக.

10. நீங்கள் அறிந்துகொண்ட தொடர்வகைகள் இடம்பெறுமாறு சிறு உரைப்பகுதி ஒன்று

எழுதுக.