பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்






7.


உழவன் விடியற்காலையில் எழுந்தான்; காளைகளை ஏரில் பூட்டினான்; வயலுக்குச் சென்றான்.

(வேறு தொடர்களைப் பொருத்தமாக எழுதியிருந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம்.)

8. தோன்றா எழுவாய்

அ) படம் வரை

ஆ) நடனம் ஆடினாள்

9. நேர்கூற்றுத் தொடர்- "கவின், மாம்பழம் சுவையாக உள்ளதா?" என அம்மா கேட்டாள்.

அயற்கூற்றுத் தொடர் - அம்மா, கவினிடம் மாம்பழம் சுவையாக உள்ளதா என்று

கேட்டாள்.

10. நீங்கள் அறிந்துகொண்ட தொடர்வகைகள் இடம்பெறுமாறு சிறு உரையாடல் ஒன்று எழுதுக.

(கற்பவர் எண்ணத்திற்கேற்ப, எந்த உரையாடல் வேண்டுமானாலும் அமையலாம். இங்கு மாதிரிக்காக ஓர் உரையாடல் தரப்படுகிறது.)

மாணவர்: ஐயா, எனக்கு மொழி வரலாறு நூல் வேண்டும்.

நூலகர்: தருகிறேன். யாருடைய நூல் வேண்டும்?

மாணவர்: மு. வரதராசனார் எழுதிய நூலைத் தாருங்கள்.

நூலகர்: இதோ தருகிறேன். மிகவும் எளிய நடையில் உள்ள நூல் இது.

மாணவர்: ஆம், ஐயா. என் ஆசிரியரும் அப்படித்தான் கூறினார்.