பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







1. பொதுவாக ஒருமைச் சொற்கள் பன்மையாகும்போது "கள்" விகுதி ஏற்கும்.

கலை + கள்

= கலைகள்

மாடு + கள்

=

மாடுகள்

ஆறு + கள்

= ஆறுகள்

2. 'ம்' என்கிற எழுத்துடன் 'கள்' சேரும்போது 'ங்கள்' ஆக மாறும்.

படம் + கள்

= படங்கள் ('ம்' முன் கள் சேர-ங்கள் ஆகியது)

சக்கரம் + கள்

=

சக்கரங்கள்

வண்ணம் + கள் = வண்ணங்கள்

3. 'ல்' என்கிற எழுத்துடன் 'கள்' சேரும் போது 'ற்கள்' ஆக மாறும்.

பல் + கள்

=

= பற்கள் ('ல்' முன் கள் சேரும்போது 'ல்' - 'ற்' ஆக மாறியது)

கல் + கள்

=

கற்கள்

சொல் + கள்

=

சொற்கள்

4. 'ள்' என்கிற எழுத்துடன் 'கள்' சேரும் போது 'ட்கள் ' ஆக மாறும்.

முட்கள் ('ள்' முன் கள் சேரும்போது 'ள்' 'ட்' ஆக மாறியது)

முள் + 'கள்'

=

ஆள் + கள்

= ஆட்கள்

புள் + கள்

= புட்கள்

5. ஓரெழுத்து ஒருமொழியுடன் 'கள்' சேரும் போது 'க்' தோன்றும்.

பூ + கள்

=

= பூக்கள்

ஈ + கள்

= ஈக்கள்

பா + கள்

= பாக்கள்

6. நெடில் எழுத்தில் முடியும் சொல்லுடன் 'கள்' சேரும் போது 'க்' தோன்றும்.

புறா + கள்

= புறாக்கள்

விழா + கள்

=

விழாக்கள்

வெண்பா + கள்= வெண்பாக்கள்