தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
103
மேற்கண்ட எடுத்துக்காட்டில், முதலில் உள்ள சொல் 'தமிழ்'. இது நிலையாக உள்ள சொல். அதனால், இதனை நிலைமொழி என்கிறோம். அடுத்துவரும் சொல் 'மொழி'. இச்சொல், தமிழ் என்னும் சொல்லைத் தொடர்ந்து வருகிறது. ஆகவே, இதனை வருமொழி என்கிறோம்.
மேலும், சில எடுத்துக்காட்டுகள்
குறிப்பு
நிலைமொழி
வருமொழி
சொற்றொடர்
பொன்
மலர்
பொன்மலர்
வாழை
மரம்
வாழைமரம்
கண்
மணி
கண்மணி
சேர்த்தல், இணைத்தல், புணர்த்தல் என்பன ஒருபொருள் தரும் சொற்கள். இவையாவும் புணர்தல் என்னும் பொருளையே தருகின்றன.
4.2.1 இயல்புப் புணர்ச்சி
பொன் + வளை = பொன்வளை.
மேலே கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டை நன்கு உற்றுக் கவனியுங்கள். நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது, ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? இல்லை. இவ்வாறு, நிலைமொழியும் வருமொழியும் தம்முள் எந்த மாற்றமும் இன்றி, இயல்பாகப் புணர்ந்தால், அதனை இயல்புப் புணர்ச்சி என்கிறோம். பின்வரும் எடுத்துக்காட்டையும் கவனியுங்கள்.
தமிழ் + அன்னை = தமிழன்னை
மேலே நீங்கள் கண்ட எடுத்துக்காட்டில் இரு சொல் புணரும்போது, மாற்றம் ஏற்பட்டுள்ளதா? இல்லை. இங்கும் இயல்பாகத்தான் புணர்ந்துள்ளது. ஏனெனில், நிலைமொழி இறுதியிலுள்ள மெய்யெழுத்து, 'ழ்'. வருமொழி முதலில் உள்ள உயிரெழுத்து, 'அ'. உயிரும் மெய்யும் சேர்ந்து வருவதும் இயல்பான புணர்ச்சியே. 'உடல்மேல் உயிர்வந் தொன்றுதல் இயல்பே' என்னும் நன்னூல் விதியை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆகவே, மேலே கூறப்பட்ட எடுத்துக்காட்டுகள் இரண்டும் இயல்புப் புணர்ச்சிக்கு உரியனவாகும்.
4.2.2 விகாரப் புணர்ச்சி
திரு + குறள் = திருக்குறள்
மண் + குடம் = மட்குடம்
மரம் + வேர்
=
= மரவேர்