பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்






எடுத்துக்காட்டு:

ஆடுகொடி

செந்தாமரை

மலர்ப்பாதம்

தாய்தந்தை

பூங்கொடி ஆடினாள்

T

|


வினைத்தொகை (முக்காலம் மறைந்துள்ளது.)

பண்புத்தொகை (பண்பு உருபு மறைந்துள்ளது.)

உவமைத்தொகை (உவமஉருபு மறைந்துள்ளது.)

உம்மைத்தொகை ('உம்' உருபு மறைந்துள்ளது.)

அன்மொழித் தொகை

இவை ஐந்தும் அல்வழிப் புணர்ச்சியின்கண் வரும் தொகைநிலைத் தொடர்கள். இவற்றின் நிலைமொழியும் வருமொழியும் புணர்ந்துவரும்.

4.5.2 தொகாநிலைத் தொடர்கள்

தொகாநிலைத் தொடர்கள் ஒன்பது வகைப்படும்.

எழுவாய்த்தொடர்

கவின் சிரித்தான்

விளித்தொடர்

பெயரெச்சத்தொடர்

வினையெச்சத்தொடர்

தெரிநிலை வினைமுற்றுத்தொடர்

குறிப்பு வினைமுற்றுத் தொடர்

இடைச்சொற்றொடர்

உரிச்சொற்றொடர்

அடுக்குத்தொடர்

I

I

T

தம்பீ, இங்கே வா.

மலர்ந்த மல்லிகை

படித்து மகிழ்ந்தான்

பார்த்தேன் தோட்டத்தை

நல்லன் இவன்

மற்றொன்று

நனிநன்று

வா வா வா வா

மேற்கண்ட ஒன்பது தொகாநிலைத் தொடர்களில் நிலைமொழியும் வருமொழியும் அல்வழிப் புணர்ச்சியில் புணர்ந்துவரும்.

4.6 உடம்படுமெய்

ஓர் உடலில் எத்தனை உயிர் இருக்கும்? ஓர் உயிர்தானே இருக்கும். ஈருயிர் இருக்காது அல்லவா! அப்படியானால், இரு சொல் புணரும்போது, நிலைமொழியின் ஈறும் வருமொழியின் முதலும் உயிராகவே இருந்தால் என்ன செய்வது? அவ்விரண்டையும் எப்படி இணைப்பது? பின்வரும் எடுத்துக்காட்டைக் கவனியுங்கள்.

அணி + அழகு

மேற்கண்ட சொல்லில் நிலைமொழி, 'அணி'. வருமொழி, 'அழகு'. இவ்விருசொல்லும் இணையும்போது, நிலைமொழியின் ஈற்றிலுள்ள எழுத்து, ணி (ண்+இ) என உயிரெழுத்தில்