பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

107







முடிகிறது. அதாவது, உயிர்முதல் உயிர்ஈறு. வருமொழியின் முதலில் அழகு என்னும் சொல், 'அ' என்னும் உயிரெழுத்தில் தொடங்குகிறது. ஆகவே, புணரும்போது உயிரும் (இ), உயிரும் (அ) புணரவேண்டும். (அ + ண் + இ) + (அ + ழ் + அ + க் + உ)

முன்னர்க் கூறியதனை இப்போது நினைவுபடுத்துங்கள். ஓர் உடலில் ஓர் உயிர் மட்டுமே. உயிரும் மெய்யும் இணைந்து உயிர்மெய்யாகும். ஆனால், இங்கு இரண்டு உயிரெழுத்து உள்ளன. எனவே, இவ்விரண்டு உயிரெழுத்தையும் உடன்படுத்துவதற்கு (இணைப்பதற்கு) நாம் புதிதாக ஓரெழுத்தை (மெய்யெழுத்தை)'ச் சேர்க்கிறோம். அதுதான் உடம்படுமெய்

அணி + அழகு

அணி + ய் + அழகு

அணி + யழகு

அணியழகு

மேற்கண்ட எடுத்துக்காட்டில், உடன்படுத்தும் மெய்யாக வந்த எழுத்து, 'ய்'. இதேபோல எல்லாச் சொற்களுக்கும் உடன்படுத்தும் மெய்யாக இதுதான் வருமா எனில், இல்லை. பின்வரும் மற்றோர் எடுத்துக்காட்டைப் பாருங்கள்.

மா + இலை

மா + வ் + இலை

மா + விலை

மாவிலை

மேற்கண்ட எடுத்துக்காட்டில், நிலைமொழியின் இறுதி, 'மா' (ம் + ஆ) வருமொழியின் முதல், 'இ'. ஆகவே, வண்ணமிட்ட உயிரெழுத்துகளை இணைக்க, இங்கு நாம் பயன்படுத்தும் உடம்படுமெய், 'வ்' என்னும் எழுத்து. மற்றுமோர் எடுத்துக்காட்டைக் கவனியுங்கள்.

சே + அடி

சே + ய் + அடி = சேவடி

சே + வ் + அடி= சேவடி

இங்கு, நாம் இரண்டு உடன்படுத்தும் மெய்களைப் பயன்படுத்தியுள்ளோம். அவை, 'ய்', 'வ்'. இதிலிருந்து நாம் ஒரு முடிவுக்கு வரலாம். சில எழுத்துகளுக்கு 'யகர' உடம்படுமெய்யும் சில எழுத்துகளுக்கு 'வகர' உடம்படுமெய்யும் வரும் எனவும் குறிப்பிட்ட ஓர் எழுத்து, இரண்டையும் பெற்று வரும் என அறிந்துகொள்ளலாம். இன்னொன்றையும் நினைவில் கொள்ளுங்கள். வருமொழி முதல் எழுத்து உயிரெழுத்தாக இருக்கவேண்டும்.

நிலைமொழி இறுதியிலும் வருமொழி முதலிலும் வரும் உயிரெழுத்துகளை இணைக்கும் மெய்யெழுத்தே உடம்படுமெய்