பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

109






4.7 குற்றியலுகரப் புணர்ச்சி


குற்றியலுகரச் சொற்கள் நிலைமொழியாக இருக்கும்போது, எவ்வாறு புணர்ந்து வரும் என்பதைப் பின்வரும் எடுத்துக்காட்டுகளின் வழி காண்போம்.

பட்டு + ஆடை = பட்டாடை

மேற்கண்ட எடுத்துக்காட்டைக் கவனியுங்கள். 'பட்டு' என்னும் சொல், குற்றியலுகரம். இச்சொல், நிலைமொழி. இச்சொல்லுக்குமுன் வருமொழி முதல் உயிரெழுத்தாக (ஆ) உள்ளது. இவ்வாறு வரும்போது, குற்றியலுகரம் கெட்டுப் புணரும்.

குற்றியலுகரம் ஆறு வகைப்படும். அவையாவும் குற்றியலுகரப் புணர்ச்சியின்போது, நிலைமொழி உகரம் கெட்டுப் புணரும்.

நெடில்தொடர்

காடு + ஆறு

காட்டாறு

ஆய்தத்தொடர்

எஃகு + ஆலை

=

எஃகாலை

உயிர்த்தொடர் உலகு + ஆளும்

=

உலகாளும்

வன்தொடர் தடுப்பு + அணை மென்தொடர் பஞ்சு + ஆலை

=

தடுப்பணை

=

பஞ்சாலை

இடைத்தொடர்

சால்பு + ஐ

சால்பை

குற்றியலுகரச்

சொல்லுக்குமுன்

வருமொழிமுதல்

புணரும்போது, ஏற்படும் மாற்றங்களையும் பின்வருமாறு காணலாம்.

ஓடு + வீடு

=

= ஓட்டுவீடு

கயிறு + கட்டில்

=

கயிற்றுக்கட்டில்

வாழ்த்து + பாடல்

=

வாழ்த்துப்பாடல்

உயிர் அல்லாத பிறசொற்கள்

என்பன போல் புணர்ந்துவரும்.

ஆறு + கரை = ஆற்றங்கரை

மேற்கண்ட எடுத்துக்காட்டிலுள்ள குற்றியலுகரச் சொல்லைக் கவனியுங்கள். இச்சொல், பல பொருள் தரும் ஒரு சொல்லாகும். 'ஆறு' என்னும் சொல், எண்ணைக் குறித்துவரும்போது, 'றகர' ஒற்று இரட்டிப்பதில்லை.

புணராது.

ஆறு + உடன் = ஆறுடன் (எண் 6) என்றுதான் புணருமேயன்றி, ஆற்றுடன் என்று

இதுபோன்று சில சொற்கள் ஒற்று இரட்டிக்காமல் புணர்ந்து வருகின்றன.