பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

113






இஃது, அல்வழிப் புணர்ச்சி; வருமொழி முதலில் மெல்லினம் வந்துள்ளது.


கல் + மலை = கன்மலை...ல்

ன் ஆனது.

ண் ஆனது.

வாள் + மாண்பு = வாண்மாண்பு...ள்

இஃது, வேற்றுமைப் புணர்ச்சி; வருமொழி முதலில் மெல்லினம் வந்தது.

கால் + யாது = கால்யாது

முள் + வலிது = முள்வலிது

அல்வழிப்புணர்ச்சியில் ல், ள் முன் இடையினம் வர ல், ள் இயல்பாயின.

கல் + யானை = கல்யானை

தோள் + வலிமை = தோள்வலிமை

வேற்றுமைப் புணர்ச்சியில் ல், ள் இடையினம் வர, இயல்பாயின.

கல் + தீது = கஃறீது

முள் + தீது = முஃடீது

இவ்வாறு தனிக்குறிலின் பின் நின்றால் ல், ள் அல்வழிப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வர, முன் சொன்னபடி றகர டகர மெய்களாகத் திரிதலே அன்றி, ஆய்தமாகத் திரிந்தும் வரும்.

வேல் + படை = வேற்படை

வாள் + படை = வாட்படை

அல்வழிப்புணர்ச்சியில் வல்லினம் வர, ல், ள் – ற், ட் ஆகத் திரிந்தன.

இல் + பொருள்

=

இல்லை பொருள்

=

இல்லைப் பொருள்

இங்கு 'ல்' என்பது ஐகாரச் சாரியை, பெற, வருமொழி முதலில் வந்த வல்லினம் மிக்கும் மிகாமலும் வந்தது.

இல் + பொருள் = இல்லாப் பொருள்

இங்கு 'ல்' என்பது 'ஆ' சாரியை பெற, வந்த வல்லினம் மிக்கது.

இல் + பொருள் = இல்பொருள்

இவ்வாறு இயல்பாக வருதலும் உண்டு.