பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







புள் + கடிது = புள்ளுக்கடிது

புள் + நன்று = புள்ளுநன்று

புள் + வலிது = புள்ளுவலிது

இவ்வாறு புள், வள் என்னும் இரண்டு சொற்களும் அல்வழிப் புணர்ச்சியில் யகரம் அல்லாத மெய்கள் வந்தால் ' உ' என்னும் சாரியை பெற்றும் புணரும்.

புள் + கடுமை = புள்ளுக்கடுமை

புள் + நன்மை = புள்ளுநன்மை

புள் + வன்மை = புள்ளுவன்மை

இவ்வாறு புல், வள் என்னும் இரண்டு சொற்களும் வேற்றுமைப் புணர்ச்சியிலும் யகரம் அல்லாத மெய்கள் வந்தால், ' உ' என்னும் சாரியை பெற்றும் புணரும்.

4.8.5 யகர, ரகர, ழகர ஈறுகள்

ய, ர, ழ ஆகியவற்றின் முன் வல்லினம் வந்தால், பின்வருமாறு புணரும்.

வேற்றுமையில் வல்லினம் மிகுந்தும் உறழ்ந்தும் வருதல்

வேய் + கிளை

=

வேய்க்கிளை

வேய் + குழல்

=

வேய் + குழல்

அல்வழியில் வல்லினம் மிகுதல்

=

= வேய்க்குழல்

= வேய்ங்குழல்

மெய் + கீர்த்தி = மெய்க்கீர்த்தி

கார் + பருவம் = கார்ப்பருவம்

யாழ் + கருவி = யாழ்க்கருவி

அல்வழியில் இயல்பாகப் புணர்தல்

வேய் + கடிது = வேய்கடிது

+

வேர் + சிறிது = வேர்சிறிது

யாழ் + பெரிது = யாழ்பெரிது

4.8.6 மகர ஈற்றுப் புணர்ச்சி

1. மகரத்தின்முன் வல்லினம்

மகரத்தின் முன் வல்லினம் வரின், வேற்றுமையிலும் அல்வழியில் பண்புத்தொகை, உவமைத்தொகையிலும் இறுதி மகரம் கெட்டு, வரும் வல்லினம் மிகும்.