பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







9. ஒன்பது

1. ஒன்பதின் முன் பத்து

ஒன்பது என்னும் எண்ணின்முன் பத்து என்னும் எண் வரும்போது பின்வருமாறு புணரும்.

ஒன்பது + பத்து

= ஒன் + பத்து

= த்+ ஒண் + பத்து

=

= தொண் + நூறு

=

தொண்ணூறு

2. ஒன்பதின் முன் நூறு

ஒன்பது என்னும் எண்ணின்முன் நூறு என்னும் எண் வரின், பின்வருமாறு புணரும்.

ஒன்பது + நூறு

=

=

ஒன் + நூறு

= த்+ஒண் + நூறு

=

தொண் + ஆயிரம்

=

தொள்ளாயிரம்

10. ஒன்று முதல் எட்டு வரை எண்ணுப்பெயர் முன் பத்து

ஒன்றுமுதல் எட்டு ஈறாக நின்ற எண்ணுப்பெயர் முன் பத்தென்னும் எண்ணுப்பெயர் வரின், அப்பத்தின் நடு நின்ற தகரமெய் கெட்டுப் பது என்றோ அல்லது ஆய்தமாகத் திரிந்து பஃது என்றோ புணரும்.

ஒன்று + பத்து = ஒருபது, ஒருபஃது

இரண்டு + பத்து = இருபது, இருபஃது

11. பத்து முதல் எண்பது வரையிலான எண்களின் முன் ஒன்று முதல் ஒன்பது

ஒருபது முதல் எண்பது வரையிலான எண்களின்முன் ஒன்றுமுதல் ஒன்பது வரையிலான அவற்றையடுத்த எண்கள் வரின், நிலைமொழி ஈற்றுக்கு அயலிலே தகரவொற்று தோன்றும்.

இருபது + இரண்டு = இருபத்திரண்டு

முப்பது + மூன்று = முப்பத்துமூன்று

12. பத்தின் முன் இரண்டு

பத்தின் முன் இரண்டு வரின், உம்மைத் தொகையில் ஈற்று உயிர்மெய் கெட்டு நின்ற தகரமெய் னகரமாகத் திரியும்.

பத்து + இரண்டு = பன்னிரண்டு