தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
3
1.2 உயிர் எழுத்துகளை ஒலிக்கும் முறை
முதலில் உயிர் எழுத்துகள் எவ்வாறு ஒலிக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம். உயிர் எழுத்துகள் அனைத்தும் காற்றின் தடை இல்லாமல் இயல்பாகவே பிறக்கின்றன.
அ, ஆ
- இவ்விரண்டு உயிர்களும் வாயைத் திறந்து ஒலிப்பதனால் பிறக்கின்றன.
இ, ஈ, எ, ஏ, ஐ – ஐந்து எழுத்துகளும் வாயைத் திறப்பதோடு மேல்வாய்ப் பல்லை, நா
விளிம்பு தொடுவதால் பிறக்கின்றன.
உ, ஊ, ஒ, ஓ, ஔ - ஐந்து எழுத்துகளும் உதடுகளைக் குவித்து ஒலிப்பதனால் பிறக்கின்றன.
1.3 மெய் எழுத்துகளை ஒலிக்கும் முறை
உ
உ
உடல் இல்லாமல் உயிர் இயங்காது. அதுபோல, மெய் இல்லாமல் மொழியும் இயங்காது. உயிர் ஒலிகள் காற்றின் தடை இல்லாமல் வாயைத் திறந்தவுடன் பிறக்கும். ஆனால், மெய்யொலிகள் காற்றினை நாக்கு, உதடு, பல் ஆகியவை தடை செய்வதால் பிறக்கும். இவ்வாறு தடை செய்யும்போது நாக்கு, பல், உதடு ஆகியவற்றைத் தடவியும் வருடியும் மெய் எழுத்துகள் பிறக்கின்றன. மெய்யொலிகளை ஒலிக்கும் இடம், தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மூவகையாகப் பிரிக்கலாம். அவை,
1.3.1 வல்லினம்
1. வல்லினம்
2. மெல்லினம்
3. இடையினம்
ஒலிகள் வல்லொலிகள். இதனை
காற்று வெடித்து வெளிவருவதால் பிறக்கும் ஒலிகள் வெடிப்பொலிகள் என்றும் கூறுவர்.
க், ச், ட், த், ப், ற்
ஆகியவை வல்லின எழுத்துகள் ஆகும். இவற்றை ஒலிக்கும்போது, காற்று வேகமாக வெளிவிடப்படல் வேண்டும்.
1.3.2 மெல்லினம்
மெல்லின எழுத்துகள் காற்று தடைபடாமல் மூக்கின் வழியாக வருவதால் தோன்றுகின்றன. காற்றை வாயில் தடுத்து மூக்கின் வழியாக வெளிவிடுவதால் இவ்வொலிகள் மென்மைத் தன்மை பெறுகின்றன இதன் காரணமாக மெல்லினம் என்ற பெயரைப் பெற்றுள்ளன. ங். ஞ். ண், ந், ம், ன் ஆகியவை மெல்லின எழுத்துகளாகும்.