பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

121






அங்குச் சென்றான், இங்குப் பார்த்தான், எங்குக் கண்டாய்? (இடப்பொருளின் பின்)

3)

4)

அப்படிச் செய்தான், இப்படிச் சொல், எப்படிப் பேசினான்?

5) அவ்வகைச் செடி, இவ்வகைப் பூக்கள், எவ்வகைத் துணி?


6)

இனிக் காண்போம், தனிச்சொல் (இனி, தனி)

7)

8)

9)

தடையின்றிச் செல், அந்த மாணவனன்றிப் பிற மாணவர் பேசக்கூடாது. (அன்றி, இன்றி)

எனச் சொன்னான், மிகச்சிறிய செடி, நடுக்கடல், பொதுக்கூட்டம் (என, மிக, நடு, பொது) முழுப்பக்கம், திருக்குளம், புதுக்கண்ணாடி, அரைப்பங்கு, பாதிக் கிணறு (முழு, திரு, புது, அரை, பாதி)

10) எட்டுத் தொகை, பத்துப்பாட்டு (எட்டு, பத்து ஆகிய எண்ணுப்பெயர்ச் சொற்களின் பின்) 11) தீச்செயல், கைக்குழந்தை, பூப்பந்தல், நாக்குழறியது (ஓரெழுத்து ஒருமொழிச் சொற்களின் பின்)

12) பாடாத் தேனீ, காணாக் காட்சி, தீராத் துன்பம் (ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்)

13) தச்சுத் தொழில், உப்புக்கடை, கேட்டுக்கொள், தத்துக்கொடுத்தான், கற்றுக்கொடு, விறகுக்கட்டை (வன்றொடர்க் குற்றியலுகரச் சொற்களின் பின்)

14) வரச்சொன்னாள், தேடப்போனார், மெல்லப் பேசினான் (அகர ஈற்று வினையெச்சம்)

15) ஓடிப்போனான், பேசிப்பார்த்தார், சூடிக்கொண்டாள் (இகர ஈற்று வினையெச்சம்)

16) ஒழுங்காய்ப் படி, மகிழ்ச்சியாய்ப் பேசினாள், போய்த் தேடு (ஆய், போய்)

17) கதிரவனைப் பார்த்தேன், தொழிலைச் செய்தார், செய்யுளைப் படித்தேன் (இரண்டாம் வேற்றுமை உருபு'ஐ' வெளிப்படையாக வரும்போது)

18) வீட்டுக்குப் போ, அவனுக்குத் தெரியும், நாட்டுக்குத் தொண்டு செய் (நான்காம் வேற்றுமை உருபு, 'கு' வெளிப்டையாக வரும்போது)

19) புலித்தோல், பூனைக்கால், கங்கைக்கரை (ஆறாம் வேற்றுமைத்தொகை)

20) எலிப்பாட்டு (எலியைப் பற்றிய பாட்டு) (இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை)

21) வெள்ளிக் கிண்ணம் (வெள்ளியால் செய்த கிண்ணம்) (மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை)

22) உரிமைப் போராட்டம் (உரிமைக்கு நடத்தும் போராட்டம்) (நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை)