122
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
23) தேங்காய்ப்பால் (தேங்காயிலிருந்து பிழியப்படும் பால்) (ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை)
24) சென்னைப் பல்கலைக்கழகம் (சென்னையின்கண் உள்ள பல்கலைக்கழகம்) (ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை)
25) அன்பாகப் பேசினார், சிறப்பாகத் தொடங்கப்பட்டது, மெதுவாகச் சிரித்தாள், கனிவாகக் கூறினார். (ஆக என்னும் சொல்லுருபின் பின்)
26) வேர்ப்பலா, வாழ்க்கை, பாய்ச்சல், வாழ்த்தினாள் (ய, ர, ழ ஒற்றுக்குப் பின் )
27) கிழக்குப் பக்கம், மேற்குத் தொடர்ச்சி மலை (திசைப் பெயர்களின் பின்)
28) நண்டுக் கூட்டம், பங்குச் சந்தை (சில மென்றொடர்க் குற்றியலுகரம் பின்)
29) மரபுக்கவிதை, அரசுப்பள்ளி, உழவுத்தொழில் (சில உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் பின்) 30) சிவப்புப் புடவை, முல்லைக்காடு, முத்துப்பற்கள் (தொகைநிலைத் தொடர்கள்)
31) சாலப் பேசினார், தடக்கை (உரிச்சொற்களின் பின்)
32) நிலாப்பாட்டு, பலாப்பழம் (தனிக்குற்றெழுத்துக்குப் பின்வரும் ஆகாரச்சொல்)
33) வாழ்க்கைப் படகு, கண்ணீர்ப் பூக்கள் (உருவகங்கள்)
34) மெல்லப் பேசு, உரக்கச் சொல், நிரம்பக் கொடுத்தார், நிறையக் கற்றான் (மெல்ல, உரக்க, நிரம்ப, நிறைய)
35) எல்லாக் குழந்தைகளும் ஒன்றுகூடின, அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை (எல்லா, அனைத்து)
36) நாட்டுப்பற்று, ஆற்றுப் பெருக்கு, வயிற்றுப் பசி (ஒற்று இரட்டிக்கும் குற்றியலுகரங்கள்)
37) அறிவுக் கல்லூரி, பொதுப் பார்வை, கணுக்கால் (முற்றியலுகரம்)
38) சின்னக்குடை, சின்னப்பெண், சின்னத்தட்டு (சின்ன என்னும் பெயரடையின் பின்)
39) கத்தியைவிடக் கூர்மை, கூடக்கொஞ்சம் கொடு (விட, கூட)
40) கீழ்க்காணும் செய்திகள், புலிகளிடைப் பசு போல (கீழ், இடை)
4.10.2 வல்லினம் மிகா இடம்
1) அது காண், இது செய், அவை சிறந்தவை, இவை கடினமானவை (சுட்டுப்பெயர்கள்)
2)
எது கண்டாய்? யாது செய்தாய்? எவை தவறு? யாவை போயின? (வினாப்பெயர்கள்)
3)
மலர் பூத்தது, குதிரை கனைத்தது, கிளி கொஞ்சியது (முதல் வேற்றுமை)