தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
123
4) என்னொடு கற்றவர், தாயோடு சென்றான் (மூன்றாம் வேற்றுமை விரி)
5)
எனது கை, எனது பல் (ஆறாம் வேற்றுமை விரி)
6)
அண்ணா கேள், கனவே கலையாதே, மகனே பார் (விளி வேற்றுமை)
7)
ஓடிய குதிரை, படித்த பெண், வென்ற தமிழன் (பெயரெச்சம்)
8)
9)
நாடு கடத்தினான், மோர் குடித்தான், புளி கரைத்தாள் (இரண்டாம் வேற்றுமைத்தொகை)
தரும்படி கேட்டான், எழுதும்படி சொன்னாள் (படி என முடியும் வினையெச்சம்)
10) பறந்தன பறவைகள், நடந்தன கால்கள் (அகர ஈற்று வினைமுற்று)
11) வாழ்க தலைவர், வாழ்க தமிழகம், வீழ்க பகைவன் (வியங்கோள் வினைமுற்று)
12) குடிதண்ணீர், குளிர்காலம், திருநிறை செல்வி, திருநிறை செல்வன் (வினைத்தொகை)
13) அத்தனை புத்தகங்களா?, இத்தனை துணிகளா? எத்தனை பேர்கள்? (அத்தனை, இத்தனை, எத்தனை)
14) அவ்வளவு கண்டேன், இவ்வளவு தந்தாள், எவ்வளவு கொடுத்தாய்? (அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு)
15)
அவனா கண்டான்? இவளா செய்தாள்? அவனே பார்த்தான், கண்ணனோ தடுத்தான்? (ஆ, ஏ, ஓ வினாப்பெயர்கள்)
16) ஒன்று கூடுவோம், மூன்று கனி, ஐந்து பழம், ஏழு கடல் (எட்டு, பத்து தவிர மற்ற எண்ணுப்பெயர்களின் பின்)
17) வள்ளுவர் கோட்டம், கண்ணகி கோவில், ஜானகி மகன் (நான்காம் வேற்றுமைத் தொகை) 18) தாய் தந்தை, செடி கொடி, வெற்றிலை பாக்கு (உம்மைத் தொகை)
19) அன்று கேட்டார், இன்று சொன்னார், என்று தருவார்? (அன்று, இன்று, என்று)
20) அவ்வாறு கேட்டார், இவ்வாறு கூறினார், எவ்வாறு பேசினார்? (அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு)
21) அத்தகைய திறமை, இத்தகைய தன்மை எத்தகைய செயல்? (அத்தகைய, இத்தகைய, எத்தகைய)
22) கை தட்டினான் (மூன்றாம் வேற்றுமைத் தொகை)
23) பள்ளி சென்றாள் (நான்காம் வேற்றுமைத் தொகை)