124
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
―
24) வரை பாய்ந்தான் (வரை மலை) (வரையிலிருந்து பாய்ந்தான்) (ஐந்தாம் வேற்றுமைத்
தொகை)
25) வீடு தங்கினான் (ஏழாம் வேற்றுமைத் தொகை)
26) தோழி கூற்று, ஆசிரியர் கல்வி, மாணவர் கையேடு (உயர்திணைப் பெயருக்குப் பின்)
27) குழந்தைக்கான கல்வி, பிறகு பார்ப்போம், உரிய பங்கு, தகுந்த கூலி, ஏற்ற பணி, முன்பு கண்டேன், யாருடைய செயல்? (ஆன, பிறகு, உரிய, தகுந்த, ஏற்ற, முன்பு, உடைய)
28) பார்க்காத பயிர், செல்லாத காசு (எதிர்மறைப் பெயரெச்சம்)
29) சிறிய கண்ணாடி, பெரிய பானை (சிறிய, பெரிய)
30) கண்டு களித்தான், வந்து போனான், செய்து பார்த்தான், அழுது தீர்த்தான் (சில குற்றியலுகரங்கள்)
31) பாம்பு பாம்பு, தா தா தா, பார் பார் பார்/ கலகல, படபட, சலசல (அடுக்குத்தொடர்/ இரட்டைக் கிளவி)
32) எழுத்துகள், கருத்துகள், நாள்கள் (கள் விகுதி)
33) ஆதிபகவன், தேச பக்தி, பந்த பாசம் (வடசொற்கள்)
34) நல்ல பையன், தீய பழக்கம், அரிய காட்சி (நல்ல, தீய, அரிய)
35) தம்பி பார்த்தான், தங்கை கூப்பிட்டாள், அம்மா பசிக்கிறது (உறவுப்பெயர்களின் பின்)
4.11 தொகுப்புரை
ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் புணர்ந்து வருவதனையும் அவற்றின் வகை, அவை பயன்படும் இடங்கள் முதலியவற்றையும் இந்தப்பாடம் வாயிலாக அறிந்துகொண்டோம். மேலும், எண்ணுப்பெயர்ப் புணர்ச்சிகளும் உள்ளன. இவற்றை அறிந்துகொள்வதோடு, பிழையின்றி எழுதவும் வேண்டும். புணர்ச்சியின் மூலம், சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் எழுத அறியலாம். செய்யுள்களைப் படிக்கும்போது, பொருளுணர்விற்கேற்பப் பிரித்துப் படிக்கலாம். உரைப்பகுதி, கதை, கட்டுரை முதலானவற்றைப் படிக்கும்போது, சொற்கள் எவ்வாறு புணர்ந்துள்ளன என்பதை அறிந்துகொள்வதோடு, அவை எவ்வகைப் புணர்ச்சிக்குரியவை என்பதையும் உணரலாம். சொற்புணர்ச்சிக்குரிய விதிகளை நன்கு அறிந்துகொண்டால், நம்முடைய பேச்சிலும் எழுத்திலும் பிழை வருவதனைத் தவிர்க்கலாம். தேவையான இடங்களில் வல்லின மெய் இடுவதும் தேவையற்ற இடங்களில் வல்லினமெய் இடாமல் எழுதுவதும் மொழிமரபைக் காக்கும். தேவையற்ற பொருட்குழப்பத்திற்கு வழிவகுப்பதையும் தடுக்கும்.