இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
130
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
இருப்பதால், இவ்விரு சொல்லையும் இணைக்க 'வகர' உடம்படுமெய் தோன்றி, மா + வ் + இலை =
மாவிலை என்றானது.
7. உயிரெழுத்துகளுள் 'ஏ' என்னும் எழுத்துக்கு வகரமும் யகரமும் உடம்படுமெய்யாக வரும். (எ.கா.) சே + வ் + அடி = சேவடி / சே + ய் + அடி = சேயடி
8. பட்டாடை
―
பட்டு + ஆடை. இச்சொற்புணர்ச்சி, குற்றியலுகரப் புணர்ச்சிக்கு உரியது.
9. கடல் இச்சொல் மெய்ம்முதல் மெய்யீறு. ஏனெனில், கடல் = க் + அ +ட் + அ + ல் என, மெய்முதல் தொடங்கி மெய்யிறுதியில் முடிகிறது.
10. நிலைமொழியின் ஈறும் வருமொழியின் முதலும் உயிரெழுத்தாக இருந்தால் யகரமெய் அல்லது வகரமெய் பெற்றுப் புணரும். இவ்விரு மெய்யும் உடம்படுமெய் என்றழைக்கப்படும். (உடம்படுமெய் = உடன்படுத்தும் மெய்)